watch video | மலை போல் குவிக்கப்பட்ட கறிச்சோறு - மதுரையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா
’’தப்பான எண்ணங்களுடன் யாரும் இதில் கலந்துகொள்ளக்கூடாது. அப்படி வரும் நபர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்’’
மலை போல சோறு, அண்டாவிற்குள் ஆறு போல கறிக்குழம்பு, ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்ட சுவரஸ்சிய திருவிழா மதுரையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமம். இங்கு காலதெய்வம் கருப்பையா முத்தையா கோயில் சிறப்புடையது. இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்கும் வழக்கம் இல்லை, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே கூடி இந்த திருவிழாவை நடத்தி வருகின்ற்னார்.
மதுரை அனுப்பபட்டி காலதெய்வம் கருப்பையா முத்தையாகோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள். அந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது#Abpnadu | #spiritual | #festival pic.twitter.com/wi9bCT2leY
— Arunchinna (@iamarunchinna) January 3, 2022