உசிலம்பட்டியில் வெடி வெடிக்க தடை; மீறினால் கடும் நடவடிக்கை - காரணம் என்ன..?
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெடி வெடிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது., மீறி வெடி வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் கல்யாணம், காதுகுத்து, இறப்பு வீடு என எல்லா நிகழ்வும் களைகட்டும். சீர் வரிசைக்கு முன்னாள் போடும் வேட்டு சத்தம் ஊரே அளரும். அந்த அளவிற்கு தங்களது தாட்டியத்தை காண்பிக்க தாய்மாமன்களும், அய்யன் அயித்தைகளும் சிறப்பாக விழாவை முன்னெடுப்பார்கள். இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெடி வெடிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி வெடி வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மஹாலில் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது.
மதுரை உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெடி வெடிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது., மீறி வெடி வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.#Madurai | #usilampatti | @SRajaJourno | @srilibi | #FireworksSafety | #abpnadu pic.twitter.com/Pi83XN43Ge
— Arunchinna (@iamarunchinna) July 6, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்