Madurai corporation election 2022 | “எடப்பாடி முடிந்தா இதை செய்யட்டும்... சவால் விடுகிறேன்..” - உதயநிதி ஸ்டாலின்
”முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள்”- என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகாட்சியில் இன்று தேர்தல் பரபரப்புரை தீவிரமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நீதி மையம் கமலஹாசன் உள்ளிட்டோர் மதுரை வருகையில் மாநகர் முழுதும் சுறுசுறுப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆனையூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மகளிர் உதவி தொகை ரூ. 1000 விரைவில் நிச்சயம் வழங்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் 10 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.
ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றம் முடக்கப்படும் என சொல்கிறார்.
நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் முடக்கி பாருங்கள். மீண்டும் தேர்தல் வந்தால் 200 இடங்களில் தி.மு.க வெற்றி பெரும். அ.தி.மு.க படு தோல்வியை சந்திக்கும். நான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காணாமல் போய் விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். நானா காணாமல் போய் விட்டேனா? என் மேல் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாசம் அதிகம், சமீப காலமாக என்னை அதிகமாக தேடுகிறார்.
சட்டசபையில் அவருக்கு எதிரில் தான் அமர்ந்து இருந்தேன். அவர் டேபிளுக்கு மேல் பார்த்தால் தெரிந்து இருப்பேன், ஆனால் அவர் டேபிளுக்கு கீழே தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார். குறைகள் மட்டுமே சுட்டிகாட்டுகிறீர்கள், இன்னும் நாலரை ஆண்டுகள் இருப்பதாக சொல்லி கூட்டத்தில் சமாளித்தார். கேஸ் சிலிண்டர் விலை விரைவில் குறைக்கப்படும். இன்னும் 4 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களும், வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட உள்ளன” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?