மேலும் அறிய
Advertisement
Madurai: தண்டவாளத்தில் சிதறி கிடந்த இரு உடல்கள் - ரயில்வே போலீஸ் விசாரணை
ரயில் மோதி இருவர் உயிரிழப்பு - குவாரிக்கு குளிக்க சென்ற இருவர் பலி மதுரை மாவட்டத்தின் வெவ்வேறு செய்திகள்.
மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில்இரு உடல்கள் சிதறி கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நேரில்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தண்டாவாளத்தில் சிதறிகிடந்த உடல்களை காவல்துறையினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில்வே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரு நபர்களும் மது அருந்துவதற்காக தண்டாவளத்தில் அமர்ந்திருக்கலாம் எனவும், தண்டாவளத்தில் நள்ளிரவில் நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவரை அடையாளம் காணப்பட்டுள்ளது இவர் பெயர் சிவகுமார் அதே பகுதியில் உள்ள அப்பள கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருவதும் தெரிய வருகிறது. மற்றொருவரின் அடையாளம் கண்டறிய முடியவில்லை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மதுரை மாவட்ட செய்தி
கல்குவாரியில் மூழ்கி சிறுமி பலி காப்பாற்றுவதற்காக சென்ற பெண்ணும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாரிசாமி அவரது மனைவி பவானி சித்ரா (50) வரிச்சியூர் உள்ள கோயில் திருவிழாவிற்காக சென்றுள்ளார். குளிப்பதற்காக பவானி சித்ரா மற்றும் அவரது உறவினர் சேவுகப் பெருமாள் மகள் தனுஷ்கா (11) என்பவர் உடன் அங்கு ஒரு குவாரியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். கல்குவாரியில் குளித்த போது சிறுமி தனுஷ்கா ஆழத்துக்கு சென்று விட்டதாக தெரிகிறது உடனே பவானி சித்ரா குழந்தையை காப்பாற்றுவதற்கு தண்ணீரில் குதித்துள்ளார். பவானி சித்ராவிற்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் குவாரி தண்ணீர் மூழ்கி மூச்சுத்திணறி உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் தண்ணீரில் குதித்து இரண்டு நபர்களையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பவானி சித்ரா மற்றும் சிறுமி தனுஷ்காவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இது குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குவாரியில் குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றுவதற்காக சென்ற பெண்ணும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion