விஜய்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... சாலை விபத்தில் தவெக நிர்வாகி மரணம் - மதுரை விரைகிறாரா..?
த.வெ.க., நிர்வாகி ஆனந்த் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை வருகை தர உள்ளார்.

மதுரை த.வெ.க., தெற்கு மாணவர் அணி தலைவர் ஆனந்த் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தனது கண்களை தானம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துகள் மாநில அரசியலில் ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதேநேரம், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார். விரைவில் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்தான் விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் த.வெ.க., மாநாட்டு வேலைகளை கவனித்து வந்த புதுச்சேரி மாநில நிர்வாகிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோல த.வெ.க., மாநாட்டிற்கு காரில் வந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.எல்.சீனிவாசன் விபத்தில் உயிரிழந்தார். இந்த சூழலில் தான் தற்போது மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆனந்த் பைக்கில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்துள்ளார். ஆனந்த் தனியார் நிறுவனத்தில் பணி செய்துவருகிறார். இந்த சூழலில் நேற்று முன்தினம் பைக்கில் செல்லும் போது குப்பைத் தொட்டி அருகில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. உயிருக்கு போராடிய ஆனந்த் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தலையில் பலமாக காயம் ஏற்பட்டதால் ஆனந்திற்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் தவெக தொண்டர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாவட்டம் தெற்கு மாணவர் அணி தலைவர் ஆனந்த் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தனது கண்களை ஏற்கனவே தானம் செய்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடதக்கது. த.வெ.க., நிர்வாகி ஆனந்த் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை வருகை தர உள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

