மேலும் அறிய
Advertisement
ஆனந்த் விஜயின் ரசிகர் என்பதை நிரூபித்துள்ளார் - புஸ்ஸி ஆனந்த்
மறைந்த மதுரை த.வெ.க., நிர்வாகி ஆனந்த், தலைவர் விஜயின் ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் கண் தானம் செய்துள்ளார் - தவெக பொது செயலாளர் ஆனந்த் பேட்டி.
மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகி ஆனந்த் இல்லத்திற்கு வந்து தவெக பொது செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் அஞ்சலி செலுத்தினார்.
இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகி
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் UPM ஆனந்த் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகன கட்டுப்பாட்டை இழந்து குப்பைத் தொட்டி அருகில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தலையில் பலமாக காயம் ஏற்பட்டதால் UPM.ஆனந்திற்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனந்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்
இந்த தகவல் தவெக தொண்டர்களிடம் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த UPM.ஆனந்த் விருப்பத்தின்படி கண்கள் தானம் செய்யப்பட்டது. உயிரிழந்த நிலையில் தனது கண்களை தானம் செய்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று ஆனந்தின் இல்லத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து UPM ஆனந்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
விஜயின் ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் கண் தானம் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் பேசும்போது...,” மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆனந்த் மறைவு தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆனந்த் விஜயின் ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் கண் தானம் செய்துள்ளார்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Friday Movie Release : காமெடி முதல் த்ரில்லர் வரை..நாளை திரையரங்கில் வெளியாகும் படங்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion