மேலும் அறிய

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளான சுருளி அருவி, குரங்கணி , கும்பக்கரை அருவி , மேகங்கள் கொஞ்சி விளையாடும் மேகமலை, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு என எந்த ஒரு மாவட்டத்திற்கும் இல்லாத தனித்தும் உள்ள தேனி மாவட்டம்.

”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்  போல வருமா”இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை; இந்த ஊருக்கும் சொந்தமானவர். இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம்தான் அது.

”நாலாபக்கமும் மழை சூழ்திருக்கும் நடுவுல பசுமை பூத்திருக்கும்” 

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!
உலகிலேயே நீண்ட மலைத் தொடரான மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்துள்ள பசுமை போர்த்திய இயற்கை எழில் கொஞ்சும் அழகிய  மாவட்டம் தேனி. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைத்தொடர்கள் , சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, குரங்கணி, மேகமலை உள்ளிட்ட பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவத்தை உள்ளடக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளது. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ளதும், எங்கும் பசுமை போர்வை போர்த்தியது  போன்று காட்சியளிக்கும்.

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது சுருளி அருவி. இந்த அருவி சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. சின்னமனூரிலிருந்து சில கிலோமீட்டர் மலைப் பயணமாக சென்றால் மேகங்கள் கொஞ்சி விளையாடும்  மேகமலை உள்ளது. இதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் தற்போது புலிகள் சரணாலயமாக மாறியுள்ளது கூடுதல் சிறப்பு.  இந்த வனப்பகுதி தமிழ் நாட்டின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக மாறியுள்ளது, அணில்கள் சரணாலயமாகவும் உள்ளது. இந்த வனப்பகுதிகளுக்குள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தமிழக,கேரளா ஆகிய இரு அரசுகளும் இணைந்து வனத் திருடர்கள் வனக் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வனப்பகுதிகளை  பாதுகாக்கப்பட்டு வருவது இந்த மாவட்டத்தில் மட்டும்தான். கம்பம் என்றாலே பள்ளத்தாக்கு பகுதி என்று கூறுவர் ஆனால் இது பள்ளத்தாக்கு அல்ல பஞ்சம் தாங்கி ஊர் என்று இதற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது.

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெல் விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது. எப்போதும் குளிர்ந்த காற்று, குளுமையான சூழலை ரசிப்பவர்கள், வெளி ஊரிலிருந்து புதிதாக இங்கு வருபவர்கள் " இந்த க்ளைமேட்டில் இருந்து விட்டு திரும்பி சொந்த ஊருக்குச்  செல்ல அவர்களுக்கு மனம் மறுக்கும்"  என கூறுவர். உலகத்திலேயே வருடம் முழுவதும் எந்தக் காலச் சூழலுக்கும் ஏற்றவாரு கம்பம் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்புப் பன்னீர் திராட்சையின் சுவையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆதிகாலத்திலிருந்து மனிதன் பயிரிட்டப் பயிர் என திராட்சையை கூறுகிறது பைபிள், இதே போன்று குரானிலும் திராட்சையின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது.

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

 ஐந்தாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு ரிக்வேதத்தில் இந்த திராட்சையின் பயன் குறித்து குறிப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிகாலத்திலேயே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த சான்றும் தமிழின் பழமையைக் கூற  ஆண்டிபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட முவ்வாயிரம்  ஆண்டுகளுக்கும் முன்பு எழுத்தப்பட்டதாக கூறப்படும் புல்லிமான் கோம்பை கல்வெட்டுகள் கிடைத்த இடம் தேனி மாவட்டம்.   தேனி மாவட்டம் இயற்கைக்கு மட்டும் பேர் போனதல்ல இலக்கியத்திற்கும்தான் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !

வீடியோ

கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget