மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Rail Route | ரயில் பயணிகள் கண்டிப்பாக இதை கவனிக்கவும் ; ரூட் மாற்றங்கள் உங்கள் கவனத்துக்கு..
மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை அக்டோபர் 20 மற்றும் 27 ஆகிய புதன்கிழமைகளில் விழுப்புரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை நவம்பர் 10-ஆம் தேதி புதன்கிழமை அன்று செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் நவம்பர் 10-ஆம் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல இயங்கும்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அதே போல் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருக்கின்றன.
1. அக்டோபர் 20 முதல் 27 வரை மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 01201 மும்பை லோக்மான்ய திலக் - மதுரை சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய எண் 01202 மதுரை - மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ஆகியவை மட்கான், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.
2. அக்டோபர் 18, 19, 20, 22, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06340 நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 19, 20, 21, 23, 26, 27 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06339 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
3. அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இதை சற்று கவனிக்கவும் -பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion