மேலும் அறிய

Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயில்! நடப்பாண்டுக்கான பூஜை நாளை மறு நாளுடன் நிறைவு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசன தேதியை தவற விட்ட பக்தர்கள் வசதிக்காக ஜனவரி 19ம் தேதி வரை "ஸ்பாட் புக்கிக்" வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் நவம்பர் 16ம் தேதி துவங்கியது. டிசம்பர் 26ல் மண்டல பூஜையும், கடந்த ஜனவரி 14ம் தேதி சபரிமலையில்  மகர சங்ரம பூஜை, மகர விளக்கு பூஜை, பந்தள அரசன் வழங்கிய திருவாபரணங்களுடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகா தீபாரதனை, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் ஆகியன நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், அன்று முதல் பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தினமும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?

Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயில்!  நடப்பாண்டுக்கான பூஜை நாளை மறு நாளுடன் நிறைவு..

பக்தர்களுக்கு திருவாபரணங்களில் வீற்றிருக்கும் அரச கோல ஐயப்ப தரிசனம்  நேற்று (ஜனவரி 17 ம் தேதி) இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இதனால், அரச கோல ஐயப்பனை காணும் ஆவலில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3 மணிக்கு துவங்கி காலை 10 மணிக்குள் 33,338 பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசித்துள்ளனர். மதியம் 12 மணி வரை அந்த பக்தர்கள் எண்ணிக்கை 42,248 ஆக அதிகரித்துள்து. மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு நடை அடைக்கும் இரவு 11 மணி வரையிலான எட்டு மணி நேரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!

Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயில்!  நடப்பாண்டுக்கான பூஜை நாளை மறு நாளுடன் நிறைவு..

நெய் அபிஷேகம் இன்று ஜனவரி 18 ஆம் தேதி  மட்டுமே நடத்தப்படும்.  நாளை ஜனவரி 19 ஆம் தேதி இரவு மாளிகாப்புரத்தில் ஸ்ரீ குருதி நடைபெறும். ஜன 20 ஆம் தேதி, பந்தளம் அரசு குடும்ப தரிசனத்திற்குப் பிறகு மகரவிளக்கு மஹோத்சவம் நிறைவடையும். மகரஜோதி தரிசன நாள் கட்டுப்பாடுகளால், முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள், தரிசன தேதியை தவற விட்ட பக்தர்கள் வசதிக்காக ஜனவரி 19ம் தேதி வரை "ஸ்பாட் புக்கிக்" வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் "ஸ்பாட் புக்கிங்" கவுண்ட்டர்கள் திறக்கட்டடுள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் திருவிதாங்கூர் தேவஸ்சம்போர்டு, கேரள போலீஸ் மற்றும் அரசு துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜன 20 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்வார். மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடை அடைத்து 18 படிகளுக்கு கீழே வருவார்.

இதையும் படிங்க: Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்

Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயில்!  நடப்பாண்டுக்கான பூஜை நாளை மறு நாளுடன் நிறைவு..

அங்கு கோயிலுக்கான சாவி, வருமானம் என்று கூறி பண முடிப்பும் மன்னர் பிரதிநிதியிடம் மேல் சாந்தி வழங்குவார். அவர் அவற்றை கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுத்து வரும் காலங்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் புறப்பட்டு செல்வார். தொடர்ந்து  மாலை ஆறு முப்பது மணிக்கு பூஜை நடத்தப்படுவதுடன் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாட்டு காலம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget