தேனி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் - பொதுமக்கள் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
தமிழக கேரள எல்லையில் உணவுப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக இருசக்கர வாகனத்தின் ரோந்துப் பணியை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
தமிழக - கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல், கனிமவள திருட்டு, உணவுப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் காவல்துறையும் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்
அந்த வகையில், தேனி மாவட்ட காவல் துறை சார்பாக மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, ரேசன் அரிசி கடத்தல், போக்சோ குற்றங்கள், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்திலிருந்து ரேசன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் ரேசன் அரிசி கடத்தல் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் வியாபாரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்தமபாளையத்தில் உள்ள உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை காவல்நிலையத்தில் 24 மணிநேரமும் ரோந்துபணி மேற்கொள்வதற்காக இருசக்கர வாகனத்தை வழங்கி மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
VJ Mahalakshmi : புதுவீட்டில் குடியேறிய சீரியல் நடிகை..காதலனுடன் திருமண வாழ்வை துவங்கும் மஹா!
காவல் நிலைய போலீசார் இரு சக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொள்வதால் உணவு பொருளை கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக 74 18 44 64 69 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிந்தால் உடனடியாக விரைந்து போலீசார் நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும் தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் குறித்து போலீசார் எந்தவித தகவலையும் வெளியிட மாட்டார்கள் என தகவல் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்