Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

திமுக பரப்புரை
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரையை இன்று தொடங்குகிறது திமுக.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க நடவடிக்கை.
அதிமுக பொதுக்குழு கூட்டம்
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. உடல்நலக் குறைவால் அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் பங்கேற்காததால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம்.
நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(டிச.11) நடைபெறுகிறது. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் - தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
புதிய உச்சத்தில் வெள்ளி விலை
வரலாறு காணாத வகையில், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 கூடியது. 1 கிலோ ரூ.2,07,000க்கும், 1 கிராம் ரூ.207க்கும் விற்பனை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 கூடி, ரூ.96,240க்கு விற்பனை.
நாளை கடைசி நாள்
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை (டிச.11) கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.
இண்டிகோ சேவை குறைப்பு!
நாடு முழுவதும் 9வது நாளாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 10% விமான சேவையை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு.
தினந்தோறும் 2,200 இண்டிகோ விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 220 விமானங்கள் குறைக்கப்படும்.
சமூக ஊடகங்கள் பயன்படுத்த இன்று முதல் தடை!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் ஊடகங்களை பயன்படுத்த தடை. மீறி அவர்களுக்கு கணக்கு உருவாக்க அனுமதித்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி அபராதம்.
உடையும் பாகிஸ்தான்
நீர்வாக சீர்திருத்தமாக பாகிஸ்தானில் உள்ள மாகாணங்களை பிரித்து, மேலும் சில சிறிய மாகாணங்களை உருவாக பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் திட்டமிட்டுள்ளாராம். இதற்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதால் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பும்ரா சாதனை
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா. ஏற்கனவே டெஸ்டில் 234, ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், T-20 போட்டியிலும் 101 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்
இன்று இறுதிப்போட்டி
14-வது ஜூனியர் உலகக் கோப்பை (21 வயதுக்கு உட்பட்டோர்) ஹாக்கி தொடருக்கான இறுதி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.





















