போலி ஆவணம் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்ட தாசில்தார் மணவாளன் பணியிடை நீக்கம்
’’ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களில் நில அபகரிப்பை தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது’’
தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு சங்கராபுரம் கிராமத்தில் சொந்த நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்குவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பெரியகுளத்தைச் சேர்ந்த சந்தனபாண்டியன் பேசியுள்ளார். இருவரும் பேசிக் கொண்டதன் அடிப்படையில் நிலத்தை வாங்க சந்திரசேகரனிடம், சந்தனபாண்டியன் 1 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால், ஒப்பந்தம் படி சந்திரசேகரன் உரிய காலத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை.
பத்திரப்பதிவை இழுத்தடித்து வந்ததால், சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணம் ஒரு லட்சத்தை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. பணம் பெற்றுக் கொண்டதோடு சந்தனப்பாண்டியன். அந்த நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய மணவாளனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். துணை வட்டாட்சியர் மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் இணைந்து சந்திரசேகரனின் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்துள்ளதாக புகார் எழுந்த நிலையில்,
’’முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என கேரளாவில் நடைபெற்ற இரண்டு சக்கர வாகன பேரணிக்கு கண்டனம்’’
இதுதொடர்பாக சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டியனை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் துணை தாசில்தார் மணவாளன் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து துணை தாசில்தார் மணவாளன் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அவரை தற்போது பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் நில அபகரிப்பு நடைபெறுகிறது. தனி நபர்கள் மற்றவர்களின் நிலங்களை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்து வருகின்றனர். ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களில் நில அபகரிப்பை தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையுடன் எண்ணற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்