மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்கு அமைச்சகம் விரைந்து ஒப்புதல் தரவேண்டும் - எம்பி வெங்கடேசன்
ரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தினை முன்னிட்டு தனியார் விடுதி முன்பாக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்
மதுரையில் ரயில்வே பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரையில் ரயில்வேதுறையின் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
நிலைக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய விவசாயத்துறை அமைச்சருமான ராதா மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய ரயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகள், இரட்டை இரயில் பாதை பணிகள், மின்மயமாக்கல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரையில் நடைபெறும்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 5, 2023
நாடாளுமன்றத்தின் ரயில்வே நிலைக் குழு கூட்டத்திற்கு வருகைதந்துள்ள காஷ்மீரத்து
பனிமலையின் பெருந்தலைவன் பரூக் அப்துல்லா அவர்களையும்,
நிலை குழு தலைவர் முன்னாள் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்
அவர்களையும்
மதுரையின் சார்பில்
வரவேற்று மகிழ்ந்தேன். pic.twitter.com/aY4oVeQhz9
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சிறப்பு அழைப்பாளராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌசலேந்திரகுமார், சதாப்தி ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கௌசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற செயலக இயக்குநர் மாயா லிங்கி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தினை முன்னிட்டு தனியார் விடுதி முன்பாக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion