மேலும் அறிய
Advertisement
குடிநீர் மீட்டர் பற்றி நிதியமைச்சர் பி.டிஆர் சொன்னது என்ன?
”என் துறை சம்மந்தப்பட்ட எதுவுமே என் கண்ணுக்கு தெரியாமல் என் அனுமதி, கையெழுத்து இல்லாமல் நடைபெறக்கூடாது என்ற வழிமுறையை நானே உருவாக்க முயற்சி செய்து வருகிறேன்” - அமைச்சர் தகவல்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தானப்ப முதலி தெரு பால் மீனாஸ் திருமண மண்டபத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
மதுரையில் பாலம் இடிந்தது தொடர்பான கேள்விக்கு
”110 டன் எடையுள்ள கட்டுமானத்தை ஹைட்ராலிக் லிப்ட் வைத்து தூக்கும்போது இரண்டே பணியாளர்கள் இருந்துள்ளனர். என் நிறுவனமாக இருந்திருந்தால் நானோ என் மேலாளரோ இருந்திருப்போம். ஆனால் அங்கு யாரும் இல்லை. படிப்பறிவற்ற உ.பியை சேர்ந்த இளம் வயதினர் இருந்துள்ளனர். பாலம் விபத்து சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். சென்னை குடியிருப்பு புகார் என்பது ஒப்பந்ததாரர் தவறான பொருட்களை பயன்படுத்தி கட்டியுள்ளார். அதனை மேலாண்மை கண்காணிப்பு செய்யவேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது”.
மதுரையில் பாலம் இடிந்தது குறித்து செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை : பாலம் இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் எ.வ வேலு..!
அரசு கட்டிடங்கள் முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ?
அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும்போது அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? இது ஜனநாயக நாடு. நான் துறைக்கு அமைச்சர் என்று இருக்கும் போதே பல செயல்கள் என் கண்ணுக்கு தெரியாமலேயே நடக்கிறது. கடந்த பத்தாண்டு காலம் தவறான மேலாண்மை நடந்துள்ளது. என் துறை சம்மந்தப்பட்ட எதுவுமே என் கண்ணுக்கு தெரியாமல் என் அனுமதி, கையெழுத்து இல்லாமல் நடைபெறக்கூடாது என்ற வழிமுறையை நானே உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். எனக்கு தெரியாமலே நடந்தாலும் யார் துறைக்கு அமைச்சரே அவர்தான் பொறுப்பேற்க முடியும். அவரை எப்படி கழட்டி விட முடியும்" எனவும்,
மேலும்..”குடிநீர் அதிகம் பயன்படுத்துபவர்களை கணக்கிட வேண்டும், அதுதான் அடிப்படையில் முக்கியம். குடிநீர் மீட்டர் பொருத்துவது என்பது ஏழை எளிய சாமானிய மக்களுக்குத்தான் நல்லது" என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion