மேலும் அறிய

Madurai Aavin: மதுரையில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்.. நாளை முதல் பால் தட்டுப்பாடு அபாயம்.. திடீர் போராட்டம் ஏன்?

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் தொடங்கியது -  நாளை முதல் பால் தட்டுப்பாடு நிலவும் அபாயம்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது.  மதுரையிலும் ஆவின் பால் தட்டுப்பாடு எதிரொலியாக, மதுரை ஆவின் பால் டெப்போக்களில் பால் அட்டை வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்  என சொல்லப்பட்டது வாடிக்கையாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆவின் நிர்வாகம்  ”ஆதார் அட்டை கட்டாயம் இல்லை ஏதேனும் ஒரு அடையாள அட்டை பெற்றுவிட்டு அதற்கு பின்பாக பால் அட்டை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் பால் டெப்போக்களுக்கு ஆவின் பால் விநியோகம் தாமதம் ஏற்பட்டதால், ஆவின் பால்பண்ணையை டெப்போ முகவர்கள் முற்றுகையிட்டனர். 
 
Madurai Aavin:  மதுரையில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்.. நாளை முதல் பால் தட்டுப்பாடு அபாயம்.. திடீர் போராட்டம் ஏன்?
 
மதுரை ஆவின் மத்திய பால்பண்ணைக்கு நாள்தோறும் மாவட்டம் முழுவதும் உள்ள 18ஆயிரம் கூட்டுறவு பால் சங்கங்களின் மூலமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 1லட்சத்தி் 36ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.  மேலும் இதர ஒன்றியங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,86,200 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. விவசாயிகள் கூட்டுறவு பால் ஒன்றியங்களுக்கு சென்று வழங்கும் பால் மொத்தமாக சேகரிக்கப்பட்டு பால்பண்ணைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பால் பாக்கெட்டுகளாக ஆவின் டெப்போக்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

Madurai Aavin:  மதுரையில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்.. நாளை முதல் பால் தட்டுப்பாடு அபாயம்.. திடீர் போராட்டம் ஏன்?
 
தற்போது லிட்டர் ஒன்றுக்கு ஆவின் தரப்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு 32 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் மாட்டுத்தீவன விலை உயர்வு பால் எடுத்துசெல்லும் வாகன போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்களுக்கு தனியார் ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் கூடுதலாக உயர்த்தி தர கோரி தொடர்ச்சியாக பால் உற்பத்தியாளர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்து  பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

Madurai Aavin:  மதுரையில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்.. நாளை முதல் பால் தட்டுப்பாடு அபாயம்.. திடீர் போராட்டம் ஏன்?
 
இது தொடர்பாக மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆவின் பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து கடந்த 1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதிலும் உரிய முடிவு எட்டாத நிலையில்  இன்று காலை முதல் ஆவின் நிறுவனத்திற்கு  பால் அனுப்பாமல் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தொடர் பால் நிறுத்தும் போராட்டம் நடைபெற தொடங்கியுள்ளது. முன்னதாக பால் கொள்முதல் விலை உயர்வு கோரி ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் பால் ஒன்றிய தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் சாந்தி எச்சரிக்கை விடுத்த நிலையில் கூட்டுறவு பால் ஒன்றியங்களுக்கு பால் அனுப்பவதற்கு விவசாயிகள் வருகை தராத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது.

Madurai Aavin:  மதுரையில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்.. நாளை முதல் பால் தட்டுப்பாடு அபாயம்.. திடீர் போராட்டம் ஏன்?
 
பால் உற்பத்தியாளர்களின் இந்த பால் நிறுத்த போராட்டத்தால் மதுரை ஆவினுக்கு வரக்கூடிய பால் வரத்து குறைத்து பொதுமக்களுக்கு நாளை காலை முதல் ஆவின் பால்பாக்கெட்டுகள் விநியோகம் செய்வதில் கடுமையான தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் தொடங்கியது -  நாளை முதல் பால் தட்டுப்பாடு நிலவும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Embed widget