மேலும் அறிய
Advertisement
மதுரை : ”வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து வருகிறது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு !
”கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில உரிமைகளின் வலிமையை உணர்த்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அமைந்துள்ளன” என நிதி அமைச்சர் பி.டி.ஆர்பழனிவேல் தியாகராஜன் பேட்டி.
ஜி.எஸ்.டி கவுன்சில் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
”ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்ற தீர்ப்பின் வழியாக உச்சநீதிமன்றம் அரசமைப்பு உரிமைகளை தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.
நேற்று அளிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், இன்று அளிக்கப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்த தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்றுள்ளது. பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன. இந்த நிலையில் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை தீர்ப்புகள் உணர்த்தியுள்ளன.
ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு ஏற்கனவே சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை. அதில், கவனிக்க வேண்டியதே மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதுதான். வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைத்து உள்ளோம். அதே அம்சத்தை தான் தீர்ப்பும் உணர்த்துகிறது. மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகள் அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் உள்ளன.
ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே மொத்தத்தில் பிழையாக உள்ளது.
😂🔥🌄🔥😂 Evening Press Meet Vera vechirukkaaru Annen 🔥 Fireworks Confirmed 🎉
— Dr. T R B Rajaa (@TRBRajaa) May 19, 2022
Good one @BabuVMK#Federalism #DravidianModel #GSTCouncil #GST pic.twitter.com/bEzzQ5rchl
பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன்" என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Railway: மதுரை - செகந்திராபாத்: கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion