மேலும் அறிய
Advertisement
மதுரை 293-வது ஆதீனமாக பொறுப்பேற்றார் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்...!
மடத்தில் தினசரி அன்னதானம், ஆதினத்திற்கு சொந்தமான கோவில்களில் திருப்பணிகள், மீனாட்சியம்மன் கோவிலில் தினசரி உஷாபிஷேகம் உள்ளிட்ட ஆறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்பட்ட மதுரை 292ஆவது ஆதீனம் அருணகிரிநாதர். தனது 77ஆவது வயதில் கடந்த 8ஆம் தேதியன்று சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 9:33 அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 12ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் ஆதீனம் நடைமுறைப்படி முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
292ஆவது மதுரை ஆதீனமான அருணகிரிநாதர் காலமான நிலையில் கடந்த 14ஆம் தேதி தருமை ஆதீனம் ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293ஆவது மதுரை ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களின் முடிவாக இன்று முனிச்சாலை பகுதியில் 292ஆவது ஆதினம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருபூஜை நடத்தப்பட்டது.
இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதினமாக மதுரை ஆதின மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமைபுர ஆதினத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் சார்பில் விடுப்பட்டு போன மதுரை மீனாட்சியம்மன் கோவில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும், மதுரை ஆதீன திருமடத்தில் நித்ய பூஜை, மாகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 4 கோவில்களிலும் தினசரி நித்யபடி பூஜைகள் நடத்தப்படவும், குடமுழக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு மடங்களின் ஆதினங்கள் சார்பிலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆசிபெற்று சென்றனர் பீடத்தில் அமர்ந்த பின் மதியம் 1.30 மணியளவில் மாகேஸ்வர பூஜையும், இன்று மாலை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வழிபாடும், அதனையடுத்து குருமூர்த்த சிறப்பு வழிபாடும் , தொடர்ச்சியாக இரவு 8 மணிக்குமேல் பட்டினப்பிரவேசமும் கொலுக்காட்சியும் நிகழவுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக பொறுப்பேற்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திருவாளர் காந்திமதிநாதன் பிள்ளை - திருமதி ஜானகி அம்மை தம்பதியினருக்கு 25.03.1954 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் பகவதிலட்சுமணன். தனது 21ஆவது வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத்தம்பிரானாகவும், 1976ஆம் ஆண்டு முதல் 1980 வரை தருமை ஆதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019ஆம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தித் தம்பிரானாகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
ஏற்கெனவே மதுரை ஆதீனத்தில் கடந்த 2019 ஜூன் 6ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion