குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் ஐ.ஜி.,க்கு வழங்க முடியாது - தமிழ்நாடு அரசு
காவல்துறை தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.எனவே சட்ட திருத்தங்கள் ஏதும் செய்ய தேவையில்லை - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தன் மகன் தமிழகன் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக மண்டல காவல்துறை அதிகாரிகள் ஐ.ஜி., குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு 19.06.2023 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.
குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் ஐ.ஜி.,க்கு வழங்க முடியாது. மாவட்ட ஆட்சியரே
— arunchinna (@arunreporter92) July 19, 2023
பிறப்பிப்பதே சரியாக இருக்கம் காவல்துறை தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க முடியும் எனவே சட்ட திருத்தங்கள் ஏதும் செய்ய தேவையில்லை - தமிழ்நாடு அரசு @SRajaJourno pic.twitter.com/lKv2Swp5KS
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்