மேலும் அறிய

அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதால் தமிழகத்தில் தலை தாழ்ந்து கிடக்கிறது.

முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,” இன்றைக்கு கடன் சுமையிலே தமிழகம் தலை தாழ்ந்திருக்கிறது என்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கிற புள்ளி விபர தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை காட்டுகிறது.  முதல் முதலாக  தமிழகத்திற்கு கடன் சுமை என்று வந்ததே 2006 இல் இருந்து 2011 வரை நடைபெற்ற கருணாநிதி ஆட்சி காலத்தில் தான். அந்த கடன் சுமை ஒன்னரை லட்சம் கோடியாகும். கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிகாலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள், நகராட்சிகளுக்கு புதிய கட்டிடங்கள், மாநகராட்சிக்கு புதிய கட்டிடங்கள்,  மாவட்ட ஆட்சியருக்கு புதிய கட்டடங்கள், வட்டாட்சியருக்கு புதிய கட்டிடங்கள் கோட்டாட்சியார்க்கு புதிய கட்டிடங்கள், புதிய யூனியன் அலுவலகங்கள் உள்ளிட்ட மூலதன செலவுகள், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் இது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி அந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி தான் கடன் சுமை இருந்தது.

அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்
 
இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது  நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை சீர்மிகு நிர்வாகமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு சீரழிந்த நிர்வாகமாக காட்சியளிப்பது நமக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புள்ளி விவரங்களோடு வெளியிட்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளிலே 2021, 2022 ஆண்டில் 87 ஆயிரத்து 977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2022,2023ஆம் ஆண்டில் முதல் 11 மாதங்களில் தமிழகம் 68 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டனர், குடிமாரமத்து திட்டத்தை நிறுத்திவிட்டனர், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர், அம்மா உணவகத்தை படிப்படியாக நிறுத்தி வருகின்றனர் , 2000 அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டனர். எந்த மூலதன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை, அப்படி என்றால் இவ்வளவு கடன் சுமை எப்படி ஏற்பட்டது. ரிசர்வ்ஆப் இந்தியா வெளியிட்ட இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதால் தமிழகத்தின் தலை தாழ்ந்து கிடக்கிறது.

அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்
 
கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கும், மதுரையில் கலைஞர் நூலகத்தை 114 கோடி ரூபாயில் கட்ட  ஆர்வம் காட்டும் திமுக அரசு, இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கும்பாபிஷேகம் செய்வதற்கும், வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிப்பதற்கும் அக்கறை காட்டாதது ஏன்?. இந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஒன்பது மாத இடைவெளியில் 50 லட்சம் சிறு,குறு நிறுவனங்கள் பாதிக்கும் வகையில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு , இலவச மின்சாரம் கேள்விக்குறி, இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது தமிழகத்தில்  வறுமை வாடிக் கொண்டுள்ளது. முன்னுக்கு பின் முரணாக பேசி, பொய் சொல்வதில் ஸ்டாலின் புலவராக உள்ளார்.  ஸ்டாலின் மக்களின் காவலராக இல்லை இன்றைக்கு மக்களின் காவலராக எடப்பாடியார் உள்ளார்.  ஆகவேதான் இந்த நாட்டு மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் மக்கள் போற்றும் அம்மாவின் ஆட்சி மலரும்” என்று கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
Embed widget