மேலும் அறிய
Advertisement
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்கள் - மதுரை மண்டலம் மேலாண் இயக்குநர் தகவல்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் - மதுரை மண்டலம் மேலாண் இயக்குனர் தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சொந்த ஊரில் கொண்டாட விரும்புவார்கள். பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ள தகவலில், 'பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வருவதால் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையில் இருந்து 280 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 610 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-135, திருப்பூர்-80, கோவை-120, திருநெல்வேலி-35. நாகர்கோவில்-35, திருச்செந்தூர் -30. மற்றவை-175 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 16.01.2023 முதல் 18.01.2023 வரை சென்னைக்கு 275 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 625 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி-138.திருப்பூர-77, கோவை-121, திருநெல்வேலி-35, நாகர்கோவில்-35, திருச்செந்துரர்-30, மற்றவை-189 பேருந்திகள் என பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டல மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
க்ரைம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion