மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரை கோட்டத்தில் ரயில் போக்குவரத்து மாற்றம் ; ஏன், எதற்கு, எப்போது வரை தெரியுமா?
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அது குறித்து முழு விபரம் தெரிந்துகொள்ள முழுமையாக படிக்கவும்.
இந்திய அளவில் ரயில் சேவை முக்கியமான ஒன்று
ரயில் சேவை என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் என அனைத்துப் பகுதி மக்களும் ரயில் சேவையை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகள் குறித்த தகவல்கள் அதிகம் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது குறித்த முழு விபரம் குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது இதோ...!
மதுரை கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நாளை முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர் - சமயநல்லூர், மதுரை - கூடல்நகர், மதுரை - திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, செப். 18-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பகுதியாக ரத்து செய்யப்படுகிறது - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு என்ன தெரியுமா? அதன் விவரம் :
ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப். 18-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை (செப். 24, அக். 1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் - செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (16846) செப். 19-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக்கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு செல்லும்.
மாற்றுப் பாதையில்...
செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப். 19 முதல் அக். 7 வரை (செப். 25, அக். 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (16128) செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.
நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில்
நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் (16352) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹௌரா அதிவிரைவு ரயில் (12666) செப். 28-ஆம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.
நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில்
நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில் (16354) செப். 28-ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ruturaj Gaikwad: முதல் பந்து பவுண்டரி..இரண்டாவது பந்தில் காத்திருந்த அதிர்ச்சி!ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion