மேலும் அறிய

Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் தானியக் கொள்கலன்கள், ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூரை கண்டுபிடிப்பு

கீழடி பத்தாம் கட்ட அகழாய்வில் இரண்டு தானியக் கொள்கலன்கள், ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூரை கிடைத்து தோண்ட, தோண்ட வெளியே வரும் தமிழனின் வரலாறு.

கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் தானிய கொள்கலன் மற்றும் மேற்கூரை

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப்  பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது. கி.மு 6-ஆம் நூற்றாண்டளவில் எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது. இதனை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிறுவியது. இதனை நூலாக வெளியிட்டு உலகறியச் செய்தது. நகர நாகரிகம் என்பதற்குப் பல்வேறுக் கூறுகள் உண்டு. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர்மேலாண்மை, நுண்கலைகள், வணிகம்,  பெருவழிகள், போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான  தொல்பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் இரண்டு தானியக் கொள்கலன்கள், ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூரை உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
 
முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் மண்பாண்டத்தால் இரண்டு தானிய கொள்கலன்கள்
 
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழடியில் தொல்லியல் துறையினர் ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்ட  பொழுது 3 - இரண்டு அடி ஆழத்தில்  நாம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் மண்பாண்டத்தால் இரண்டு தானிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த  தானியக் கொள்கலனில்  நம் முன்னோர்கள் வீட்டில் தங்களது தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
 
சுடுமண் ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூறையும் கிடைத்துள்ளது.
 
அதன் அருகையே மற்றொரு குழியில் அதன் தொடர்ச்சியாக இரண்டடி ஆழத்தில்  நம் முன்னோர்கள் வீடு கட்டி வாழ்ந்ததற்கு அடையாளமாக  சுடுமண் ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூறையும் கிடைத்துள்ளது. இதன் மூலம் நாம் முன்னோர்கள் நகர நாகரீகத்தோடு மிகச் செழிப்பாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டும் விதமாக இன்னொரு ஆதாரமும் கிடைத்துள்ளது. என்று, தொல்லியல் துறை தெரிவித்தனர். தொடர்ந்து கீழடியில் பத்தாம் கட்ட  அகழாய்வு பணிகள் தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் பண்பாட்டினையும் தொன்மையையும் உலகறியச் செய்ய தமிழ்நாடு  அரசுத் தொல்லியல் துறையின் பணி அரசின் வழிகாட்டுதலுடன் தொடரும்” என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
மதுரை பாஜக பொதுக்கூட்டம்: மோடி இரட்டை விரல் புகைப்படம் மாற்றம்.. அரசியல் காரணம்!
மதுரை பாஜக பொதுக்கூட்டம்: மோடி இரட்டை விரல் புகைப்படம் மாற்றம்.. அரசியல் காரணம்!
தேனி தென் காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருக்கல்யாணம்: பக்தர்களின் பரவசம்!
தேனி தென் காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருக்கல்யாணம்: பக்தர்களின் பரவசம்!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget