Ruturaj Gaikwad: முதல் பந்து பவுண்டரி..இரண்டாவது பந்தில் காத்திருந்த அதிர்ச்சி!ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?
Duleep Trophy 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் துலீப் கோப்பையில் இரண்டாவது பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் ரிட்டையரான சம்பவம் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் துலீப் கோப்பையில் இரண்டாவது பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் ரிட்டையரான சம்பவம் நடைபெற்றுள்ளது.
துலீப் கோப்பை:
உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது சுற்று இன்று(செப்டம்பர் 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதில் தற்போது துலீப் கோப்பையில் விளையாடி வரும் கே.எல்.ராகுல், சுப்மன் கில் மற்றும் யஜஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இதனால் இன்று சென்னை விமான நிலையத்திற்கு இந்திய அணி வீரர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்க்கு ஐந்து நாட்கள் வீரர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் ருதுராஜ் தலைமையிலான இந்திய சி அணியும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய பி அணியும் ஆந்திர மாநிலம் அனத்தன்பூரில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?
அந்தவகையில் இந்திய சி அணியின் கேப்டன் ருதுராஜ் பேட்டிங் செய்ய வந்தார். முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஏனென்றால் இந்தியா அடுத்தடுத்து பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால், ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம் பெற துலீப் கோப்பையை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை தான் இருக்கிறது. முதல் சுற்றில் ருதுராஜ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இரண்டாவது சுற்றில் அவர் நல்ல முறையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு ஏற்றார் போல் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் இரண்டாவது பந்தை அடிக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து ருதுராஜ் களத்தில் இருந்து வெளியேறினார். மேலும், ரீடர்ட் ஹர்ட் அறிவித்து பெவிலியன் திரும்பினார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IND vs BAN: அதிரப்போகுது தலைநகர்! நாளை சென்னைக்கு வரும் இந்திய கிரிக்கெட் அணி!
மேலும் படிக்க:Rohit Sharma: மும்பை அணியில் ரோகித்தின் இடம் காலி..! வெளியேறுவாரா? டிரேட் செய்யப்படுவாரா? புதிய அணி எது?