மேலும் அறிய

Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?

Eye Drops License: இந்திய அரசு குறிப்பிட்ட கண் மருந்து உற்பத்திக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Eye Drops License: பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட கண் மருந்து உற்பத்திக்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

கண் மருந்து உற்பத்தி உரிமம் ரத்து:

ப்ரெஸ்பியோபியா உள்ளவர்களுக்கு கண்ணாடிகளின் தேவையைக் குறைப்பதாகக் கூறும், PresVu எனப்படும் கண் சொட்டு மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) தெரிவித்துள்ளார்.  ப்ரெஸ்பியோபியா என்பது ஒரு பொதுவான வயது தொடர்பான பிரச்னையாகும்.இந்த பிரச்னை ஏற்பட்டால் நெருக்கமாக இருப்பதை சரியாக பார்க்க முடியாது.

உரிமம் ரத்துக்கான காரணம் என்ன?

கண் சொட்டு மருந்து தயாரிப்பாளரான என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் , நோயாளிகளின் பாதுகாப்பற்ற பயன்பாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை எழுப்பும் வகையில், அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை மேற்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன . அதாவது,  அந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், மருத்துவரின் பரிந்துரை இன்றியே அந்த மருந்த பயன்படுத்தலாம் என்பது போன்ற விளம்பரங்கள் வெளியானதால் உற்பத்தி உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

உற்பத்தி நிறுவனம் சொல்வது என்ன?

PresVu கண் மருந்தை உற்பத்தி செய்யும் Entod Pharmaceuticals நிறுவனமோ, நாங்கள் எந்தவொரு நெறிமுறையற்ற அல்லது பொய்யான உண்மைகளை வழங்கவில்லை எனவும், உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், "DCGI எங்களுக்கு வழங்கிய ஒப்புதல் என்பது 234 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையிலானது ஆகும். இந்த மருந்து ப்ரெஸ்பியோபியா நோயாளிகளுக்கு செயல்திறன் மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் வெற்றி பெற்றது. இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் கண்கண்ணாடிகள் இல்லாமல் சிறிய அளவிலான வரிகளை கூட படிக்க முடியும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே செயல்திறன் மற்றும் அதே செறிவு கொண்ட மூலப்பொருள் நிறைந்த இத்தகைய கண் சொட்டுகள் US FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தீவிர சிக்கல்களும் இல்லாமல் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. FDA இதை அமெரிக்காவில் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ," என்று PresVu கண் மருந்தை உற்பத்தி செய்யும் Entod Pharmaceuticals நிறுவனம் தெரிவித்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Embed widget