சிவகங்கையில் சோகம்! கண்மை டப்பாவை விழுங்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில் ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை முழுங்கி இறந்த சம்பவம் அவர் குடும்பத்தார்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென அந்த குழந்தை மூச்சு திணறியதை அடுத்து அவர் தாய் பார்த்தபோது அவர் அருகில் இருந்த கண் மை டப்பா குழந்தையை வாயில் இருப்பதை அறிந்து, குழந்தையின் தாய் டப்பாவை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
சிவகங்கையில் குழந்தை இறப்பு
நடிகர் கே.பாக்கியராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு எனும் திரைப்படத்தில் பாக்கியராஜின் குழந்தை நாணயத்தை விழுங்கும் காட்சி பதபதைக்க வைக்கும். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நாணயத்தை எடுத்துவிடுவார்கள். அந்த காட்சி படத்தின் முக்கியமான காட்சியாகவும் அமையும். கிராமபுறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சி அமைந்துருக்கும். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றை வயது குழந்தை கண்மை டப்பாவை விழுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதுவும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளிடம் சிறிய அளவிலான பொருட்களை அருகில் வைத்தால், வாயில் வைத்து சுவைப்பது, அதனை விழுங்க முயற்சிப் பதும் வழக்கம். எனவே அது போன்ற பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இதனை முறையாக தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிவகங்கையில் அஜாக்கிரதை காரணமாக குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் சோகம்
மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் இவர் அஞ்சல் துறையில் பணி செய்து வருகின்றார். தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள அவரின் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்நிலையில் சூரிய பிரகாஷின் ஒரு வயது மகனான தரன்தேவாவுக்கு பவுடர் அடித்து, பொட்டு வைத்துள்ளார், தரன்தேவாவின் தாய். இவர் அடுப்படிக்கு சென்ற நிலையில் குழந்தை அருகில் இருந்த கண் மை டப்பாவை எடுத்து வாயில் வைத்துள்ளது. திடீரென அந்த குழந்தை மூச்சு திணறியதை அடுத்து அவர் தாய் பார்த்தபோது அவர் அருகில் இருந்த கண் மை டப்பா குழந்தையை வாயில் இருப்பதை அறிந்து, குழந்தையின் தாய் டப்பாவை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார். எதிர்பாராத விதமாக குழந்தை டப்பாவை முழுங்கி விட்டது. இந்த நிலையில் குழந்தையின் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில் ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை முழுங்கி இறந்த சம்பவம் அவர் குடும்பத்தார்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
” இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் , - களைகட்டும் விநாயகர் சதுர்த்தி! பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?