Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ள சூழலில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

Trump Modi: பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான உரையாடலில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ட்ரம்புடன் பேசிய பிரதமர் மோடி:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதகவும், அது "அன்பான மற்றும் ஈர்க்கக்கூடிய" உரையாடலாக இருந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின்போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்க உறவுகளில் நடந்து வரும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர். மேலும் சமீபத்திய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களைப் பற்றியும் விவாதித்துள்ளனர்.
வர்த்தகம், முக்கியமான தொழில்நுட்பங்கள், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி போட்ட ட்வீட்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிபர் டிரம்புடன் மிகவும் அன்பான மற்றும் ஈர்க்கக்கூடிய உரையாடலை நடத்தினோம். எங்கள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஆழமடையவும், பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும், பொதுவான நலன்களை முன்னேற்றி கொண்டு செல்வதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Was a delight to have hosted NDA MPs for dinner at 7, Lok Kalyan Marg this evening. The NDA family represents a shared commitment to good governance, national development and regional aspirations. Together, we will continue working to strengthen our nation’s development journey…
— Narendra Modi (@narendramodi) December 11, 2025
2 மாதங்களுக்குப் பிறகு அழைப்பு:
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் கலந்துரையாடல் இதுவாகும், அப்போது காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக ட்ரம்பை பிரதமர் மோடி வாழ்த்தினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதில் மோடியும் டிரம்பும் திருப்தி தெரிவித்தனர், ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் நிலையான முன்னேற்றத்தைக் குறிப்பிட்டனர்.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடியும் டிரம்பும் வலியுறுத்தினர், இது இரு அரசாங்கங்களுக்கும் முன்னுரிமையாகும். மூலோபாய ஈடுபாட்டை தொடர்ந்து விரிவுபடுத்துவதால், தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனராம். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்டம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழுத்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை:
அண்மையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை தந்திருந்தார். அப்போது இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதொடர்பான புகைப்படங்களை குறிப்பிட்டு, ரஷ்யாவை நோக்கி இந்தியாவை தள்ளுவதாக ட்ரம்ப் மீது அமெரிக்க எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இதனால் எழுந்த அழுத்தத்தை தொடர்ந்தே பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக ட்ரம்ப் பேசியதாக கூறப்படுகிறது.





















