மேலும் அறிய
துரோகத்தை மறைக்க... எடப்பாடி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் - கருணாஸ் குற்றச்சாட்டு !
”வரவிருக்கும் 2026 தேர்தலில் எடப்பாடிக்கு வெற்றி கடினம்; திமுக தான் வெற்றி பெறும்” - கருணாஸ்

கருணாஸ்
Source : whats app
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக, கூட்டணியில் அதிமுக இருந்தாலும், உடைந்த கண்ணாடி ஒட்டாது. - என கருணாஸ் பேட்டி.
சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும், நடிகருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு
”தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டதையும், இதன் மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதை வரவேற்று, முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.,விற்கு எதிராக நூல்வெளியீடு
பாஜக மேற்கொள்ளும் “அரசியல் சூதாட்டங்களை” வெளிச்சமிட்டுக் காட்டும் நூலை விரைவில் வெளியிட உள்ளதாகவும், அதில் 2026 தேர்தலை முன்னிட்டு பாஜக செய்த தவறுகளை எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார். அதேவேளை, “எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தன் நலனுக்காக பயன்படுத்துகிறார்; தென் மாவட்டங்களில் அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை. திமுக கூட்டணியோடு இணைந்து ஆரிய சிந்தனைகள் தமிழகத்தில் வேரூன்றாது என உறுதி செய்வோம்” என்று கூறினார்.
ஏமாற்றும் முயற்சி
முத்துராமலிங்க தேவரின் பெயரை விமான நிலையத்துக்கு வைப்பது தொடர்பாக, “நான் சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தேன்; அப்போதே எடப்பாடி நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று வெளியிடும் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் முயற்சி” என்றும் விமர்சித்தார்.
நேரடி அரசியல் தான் ஒத்துவரும்
திரைத்துறையிலிருந்து விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்து, “அரசியல் சமூக வலைதளங்களில் அல்ல; மக்களிடையே நேரடியாக நடந்தே தீரும்” என கருத்து தெரிவித்தார்.
உடைந்த கண்ணாடி ஒட்டாது
மேலும், “எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக, கூட்டணியில் அதிமுக இருந்தாலும், உடைந்த கண்ணாடி ஒட்டாது. வரவிருக்கும் 2026 தேர்தலில் எடப்பாடிக்கு வெற்றி கடினம்; திமுக தான் வெற்றி பெறும்” என கருணாஸ் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















