திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர் கட்சி ஒரு நீதியா. திமுக மாவட்ட செயலாளர் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இந்த வழக்கை முடித்து வைக்குமாறு காவல்துறையே மிரட்டியதாக கூறப்படுகிறது - சிவி சண்முகம்

விழுப்புரம் : பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளரை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேட்டி.
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை- அதிமுக போராட்டம் நடத்தும்
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளரை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தா. அப்போது அவர் பேசுகையில்:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுபேற் நான் கரை ஆண்டுகளில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை மாத்திரை அதிகரித்துள்ளது. இதனால் குற்றச்சன்பங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைக்கு செல்வோர், சாலையில் நடந்து செல்லும் பள்ளி பெண் பிள்ளைகளுக்கும் இந்த ஆட்சி பாதுகாப்பு இல்லை. முதல்வர் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் திமுக உறுப்பினர் இல்லை என சொன்ன திமுக வானூர் ஒன்றியத்தில் திமுக ஒன்றிய கழக செயலாளர் பாஸ்கர் என்பவர் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் மாவட்ட செயலாளர் லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டவர். கைவிடப்பட்ட பெண்ணை அரசு பணி வாங்கி தருவேன் என கூறி வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி அவர் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். கடந்த ஆறு மாத காலமாக கைவிடப்பட்ட பெண்ணை திமுக பிரமுகர் வன்கொடுமை செய்துள்ளார். இதுக்குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து ஆறு நாட்கள் ஆகியும் இன்று வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆறு மாத காலம் ஆதரவற்ற பெண்ணை வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர்கள் மீது ஸ்டாலின் தலைமையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர் கட்சி ஒரு நீதியா. திமுக மாவட்ட செயலாளர் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இந்த வழக்கை முடித்து வைக்குமாறு காவல்துறையே மிரட்டியதாக கூறப்படுகிறது. இன்னமும் அந்த கற்பழித்த குற்றவாளி சுகந்திர நேரம் சுத்தி வருவகிறார். தொடர்ந்து குற்றங்களில் ஈடுப்பட்டு வருபவரை ஒன்றிய செயலாளராக பதவி கொடுத்து அதிகாரத்தில் வைத்துள்ளது திமுக. வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அந்த பெண்ணிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவங்கள் பற்றி மாற்றி எழுதிக் கொடுக்குமாறு அந்த பெண்ணும் காவல்துறையினர் கூறி வருகின்றனர் இதனை காவல்துறையினர் கைவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நாளைக்கு ஏதேனும் நடந்தால் திமுகவினர் தான் பொறுப்பு. குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் ஓரிரு நாளில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
அதிமுகவில் இருந்து யாரும் வெளியேறவில்லை : செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இல்லை அவர் ஓபிஎஸ் அணி எனவும் தெரிவித்துள்ளார்.





















