மேலும் அறிய
மதுரையில் நள்ளிரவில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து: 40 லட்சம் மதிப்பிலான கார்கள் எரிந்து நாசம்! காரணம் என்ன?
தீவிபத்தில் ஓர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த 40 லட்சம் மதிப்பிலான 10 கார்கள் மற்றும் இரு பைக்குகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

கார்கள் தீ விபத்து
Source : whats app
மதுரையில் நள்ளிரவில் அடுத்தடுத்த கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. பரிதாபம்.
பூட்டிய ஒர்க்ஷாப்பில் தீ விபத்து
மதுரை மாநகர் டி.வி.எஸ் நகர் வெங்கடாசலபுரம் பகுதியில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பரந்தாமன் ஆகிய இருவரும் கடந்த 22 வருடமாக கார் ஒர்க்ஷாப் மற்றும் கார் பெயிண்டிங் தொழில் நடத்தி வருகின்றனர். இருவரது ஒர்க்ஷாப்கள் அருகருகே இருந்துவந்துள்ளது. இங்கு கார்கள் பழுது பார்க்கவும் கார் பெயிண்டிங் செய்வதற்காக ஏராளமான கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றிரவு பணியை முடித்துவிட்டு ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
தீ பிழம்பு அதிகமாக வெளியேறியதோடு புகைமூட்டமாக காணப்பட்டது
இதனிடையே நள்ளிரவு 2 மணி அளவில் பரந்தாமன் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது மளமளவென அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களில் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் முழுவதும் தீ பிழம்பு அதிகமாக வெளியேறியதோடு புகைமூட்டமாக காணப்பட்டதால் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஓர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 கார்கள் - பைக் சேதம்
இந்த தீவிபத்தில் ஓர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 கார்கள் மற்றும் இரு பைக்குகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. பூட்டிய ஒர்க்ஷாப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கார்கள் எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















