அஜித்குமார் மரணம்: நிகிதா மீது 2011-ல் ரூ.16 லட்சம் மோசடி வழக்கு! அதிர்ச்சி தகவல்!
சிவகங்கை லாக்கப் மரணத்தில் உயிரிழந்த அஜித் குமார், விவகாரத்தில் தொடர்புள்ள நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு.

சிவகங்கை மடப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த கோயிலுக்கு கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நிகிதா மற்றும் அவரது தாயாரும் காரில் வந்துள்ளார்கள். நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன் பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர். இது தொடர்பான போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது.
அஜித்தின் குடும்பத்திற்கு உதவி




















