மேலும் அறிய
அஜித் குமார் மரணம்: பாஜக, அதிமுக இணைந்து தமிழக அரசுக்கு எதிராக திருப்புவனத்தில் கொந்தளிப்பு! நிவாரணம் கிடைக்குமா?
அஜித் குமார் மரணம்: பாஜக - அதிமுக கட்சிகள் இணைந்து போராட்டம் தமிழக அரசுக்கு எதிராக திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிமுக - பா.ஜ.க., ஆர்ப்பாட்டம்
Source : whats app
அஜித் குமார் உயிரிழப்பு சம்பவம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் இறப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அஜித் குமார் தொடர்பான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. மேலும் அஜித் குமார் உயிரிழப்பு தொடர்பாக ஆவணங்களை கேட்டு வழக்கு 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அஜித்குமார் வீட்டில் நிவாரண தொகையும், வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசுப் பணியாணையும் வழங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தமிழக எதிர்கட்சிகள் இணைந்து திருப்புவனம் பகுதியில் ஆர்ப்பாட்டடம் நடத்தி வருகின்றனர்.
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், காவல் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளர் அஜித் குமாருக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் திருப்புவனம் பேருந்து நிலையம் அருகே கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியினை விமர்சித்து கோஷங்கள் எழுப்பினர்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர் பி. செந்தில்நாதன், பெருங்கோட்டை பகுதி பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இரு கட்சிகளையும் சேர்ந்த பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக அவரது குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரி, ஆட்சியினை விமர்சித்து கோஷங்கள் எழுப்பினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















