மேலும் அறிய

Madurai: இரண்டு ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பதே அதிமுகவுக்கு 100 % வெற்றிதான் - ஆர்.பி.உதயகுமார்

மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் ஆளும் கட்சி என இரண்டையும் எதிர்த்து அதிமுக களத்தில் நிறுத்தியதே அதிமுகவுக்கு 100 சதவிகிதம் வெற்றிதான் - மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பாக சென்னை தலைமை கழகத்தில் வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை செல்வதற்காக  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை ரயில் நிலையம் வருகை தந்து, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவை கண்ட இந்த மக்கள் இயக்கத்தை எடப்பாடியார் வெற்றிப்பாதையில் அழைத்துச்  சென்றுள்ளார். இன்றைக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்பமனுவை பெற்றுக் கொண்டு வருகிறார்கள். 40 தொகுதிகளில் தனித் தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று கழக அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமை கழகத்தில் கழக அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்பமனுவை கழக அம்மா பேரவையின் சார்பில் நாளைக்கு தாக்கல் செய்ய நிர்வாகிகள் சென்னைக்கு செல்கிறோம். பாரத பிரதமர் பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவி அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இயக்கத்தை 17.10.1972 ஆம் ஆண்டு  புரட்சித்தலைவர் தோற்றுவித்தார். இதனை தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தது.

Madurai: இரண்டு  ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பதே அதிமுகவுக்கு 100 % வெற்றிதான் - ஆர்.பி.உதயகுமார்

குறிப்பாக கறவை மாடுகள் ஆடுகள் திட்டம், மக்களின் வாழ்வாதார திட்டத்திற்காக தொலைநோக்கு  திட்டங்கள், பசிபட்டினி இல்லாத வண்ணம் 20 கிலோ அரிசி திட்டங்கள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் அனைவரும் பாராட்டை அம்மா அரசு பெற்றது. அதிமுக ஆட்சியை யாரும் குறை கூற முடியாது அதற்கு தான் பாரத பிரதமர் சான்று அளித்துள்ளார். அந்த சான்று இன்றைக்கு புரட்சித்தலைவர், அம்மாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியாரை சாரும். அதுமட்டுமல்ல 17 மருத்துவக் கல்லூரிகள், 2000 அம்மா மினி கிளினிக், 69 சகவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 இட ஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை யாரும் மறக்க முடியாது. இன்றைக்கு இரண்டு கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அதிமுகவின் வலுவான கட்டமைப்பு உள்ளது சாமானிய மக்களின் இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது.

Madurai: இரண்டு  ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பதே அதிமுகவுக்கு 100 % வெற்றிதான் - ஆர்.பி.உதயகுமார்

கூட்டணி குறித்து எடப்பாடியார் அதிமுக நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார். மதுரையில் நடைபெற்ற எஸ்டிபி மாநாட்டில் கூட கூறியுள்ளார் அதிமுக நிலைப்பாடு இதுதான். ஆனால் பிஜேபி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியை பொறுத்து அந்த வரும் விபரம் எங்களுக்கு தெரியாது. இந்த பொது தேர்தலில் அதிமுக முடிவை தெள்ளத் தெளிவாக எடப்பாடியார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. மக்களை காக்கும் பணியில் எடப்பாடியார் மனம் உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100% வெற்றி பெறுவார் இதுதான் அதிமுக நிலைப்பாடு இதில் நாங்கள் உறுதியாக பயணம் செய்வோம். இன்றைக்கு அனைவரும் விருப்பமான தாக்கல் செய்து வருகிறார்கள், தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும் அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். நாடாளுமன்றத்தில் முல்லை பெரியார், காவிரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை தமிழகத்தின் உரிமையை காக்க 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை .வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget