மேலும் அறிய
Advertisement
Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!
அப்பா பொங்கலுக்கு வர்றதாதான் சொன்னாரு. ஆனா இப்ப அவர் உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு.
வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற தந்தை திரும்பவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தும் நான்கு பெண் குழந்தைகள் சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பனங்காடி அருகே உள்ளது அல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - இன்பவள்ளி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாகவும், சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாகவும் ஆனந்தன் கடந்த 8 வருடமாக வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். தற்போது துபாயில் அல்த்தோஸ் என்ற இடத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில் வேலை முடிந்து ஊர் திரும்புவதாக குடும்பத்தினரிடம் போனில் தெரிவித்துள்ளார்.
#sivagangai ; "அப்பா ஆனந்தன் பொங்கலுக்கு வருவேனுன்னு சொன்னாரு.... இப்ப என்ன ஆனாருன்னு தெரியல ! 4 பெண் பிள்ளைகளுக்காக வெளிநாடு சென்ற தந்தையை மீட்க குடுத்தினர் மனு அளித்துள்ளனர் !@SRajaJourno | @KartiPC | @OfficeOfKRP | @s_palani @SivagangaiDist @ADMK_Sivagangai @CMOTamilnadu pic.twitter.com/EQbTYfTdtL
— arunchinna (@arunreporter92) January 7, 2023
ஆனால் கடந்த டிசம்பர் 30ம் தேதி போனில் பேசிய பிறகு அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்து வருகிறது. ஆனால் அவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா, இல்லை இறந்துவிட்டாரா என்ற உறுதியான தகவல் இல்லை. இதனால் ஆனந்தனின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்தபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில், ஆனந்தனின் மூத்த மகள் சரண்யாவிடம் பேசினோம்."அப்பா பொங்கலுக்கு வர்றதாதான் சொன்னாரு. ஆனா இப்ப அவர் உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு. அப்பா உயிரோட இருக்காரா இல்லையானு எங்களுக்கு தெரியல.
அப்படி அவர் இறந்திருந்தால். அவர் வேலை செஞ்ச கம்பெனிதான் முழு பொறுப்பு. கடைசியா அவர் பேசும்போது அவர் வேலை செஞ்ச கம்பெனி கொடுமப்படுத்துறதா சொன்னாரு. அவர் மீது திருட்டுப் பழிய போட்டு போலீஸ் வச்சு அடிச்சுருக்காங்க அதனால கூட அவர் இறந்திருக்கலாம். எனவே அந்த கம்பெனி மேல நடவடிக்கை எடுக்கனும். எங்க அப்பாவ நல்லபடியா மீட்கனும்" என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடம் பேசினோம். ”அயலக வாழ் தமிழர் ஆணையத்திற்கு இது குறித்து தகவல் அனுப்பியுள்ளோம். அவர்கள் மூலம் மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனு அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுவிடும். இது தான் நடைமுறை. விரைவில் ஆனந்தன் மீட்கப்படுவார்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.
உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?
ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion