மேலும் அறிய
மதுரையில் பன்னாட்டு விமான நிலையம்: அழுத்தம் கொடுப்போம் என எம்.பி.,கள் கூட்டாக பேட்டி!
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதுக்கு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றனர்.

சு.வெங்கடேஷன் மற்றும் மாணிக்கம்தாகூர் எம்.பி.,
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து நான்காவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் விமான நிலைய இயக்குனர் பாபுராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை விமானநிலைய ஆலோசனைக்குழுக் கூட்டம் நடை பெற்றது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 24, 2021
ஆலோசனைக்குழுவின் தலைவர் திரு. @manickamtagore , துணைத்தலைவர் திரு ராஜன் செல்லப்பா MLA மற்றும் விமானநிலைய இயக்குனர் திரு.பாபுராஜ் மற்றும் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். #Airport #Madurai pic.twitter.com/eACNXr6PW2
இதனைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேசியதாவது....,” மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்த பிரச்னை இன்றுடன் முடிவடைகிறது. 100 சதவீத நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு உள்ளது., அதில் 60% நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது., மீதம் உள்ள 40% நபர்களுக்கு ஒரு மாதத்திற்குள் வருவாய் துறை அதிகாரிகள் வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. கடந்த ஆண்டை விட தற்போதைய நடப்பாண்டில் இருமடங்கு பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேச உள்ளோம். நிர்வாக ரீதியாக செய்ய வேண்டிய வேலைகளுக்கு அழுத்தம் கொடுத்து அரசியல் அல்லாது அனைவரையும் அழைத்து பேசி விரிவாக்க பணிகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை விமான நிலையத்திற்கு விரிவாக்க பணிக்கு 626 ஏக்கர் நிலம் தேவைப்படுவதில்., 526 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 86 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத்தப்படும். 250 கோடி மதிப்பீட்டில் 110 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு மிக முக்கியம் பையாற்றல். தென் தமிழ்நாட்டில் அடையாளமாக இருக்க கூடிய மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கும், உள்ளிட்ட வசதிகளை செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்





















