தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனி மாவட்டத்தில் நாளை முதல் வரும் சனிக்கிழமை ஜனவரி 24ம் தேதி வரை மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதிகளின் விபரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
தேனி மாவட்டத்தில் இந்த வாரம் நாளை முதல் வரும் சனிக்கிழமை ஜனவரி 24ம் தேதி வரை இந்த ஒரு வாரத்தில் எங்கெல்லாம் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது? எந்தெந்த பகுதிகளில், எவ்வளவு நேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது என பார்க்கலாம்.
தேனி மின் தடை
தேனி மாவட்டத்தில், தேனி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, காமாட்சிபுரம், உத்தமபாளையம் மற்றும் மதுராபுரி ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில், நாளை முதல் வரும் ஜனவரி 24ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுமார் 7 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மேற்கண்ட துணை நிலையங்களுக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நாட்களில் மின்சார சப்ளை இருக்காது என விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜனவரி 22ம் தேதி நாளை வியாழக்கிழமை,
கடமலைக்குண்டு (வருஷநாடு வட்டம்): ஆத்தங்கரைப்பட்டி, வருஷநாடு, குமணந்தொழு, அறுகுவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காமாட்சிபுரம் (சின்னமனூர் வட்டம்) : துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
ஜனவரி 23 - வெள்ளிக்கிழமை, உத்தமபாளையம் : உத்தமபாளையம் டவுன், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வலையங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
ஜனவரி 24 - சனிக்கிழமை, மதுராபுரி : லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அன்னஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்





















