பொங்கல் எதிரொலி: தேனி , திண்டுக்கல்லி கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அப்போது பூக்கள் விலை பலமடங்கு அதிகரிக்கும். அதன்படி திண்டுக்கல்லிலும் பண்டிகை நாட்களில் பூக்கள் விலை கிடு, கிடுவென உயரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000 வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆனது.
பழனி கோயில் கும்பாபிஷேகத்தை காண 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
அதேபோல் ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்து 500-க்கும், ரூ.800 முதல் ரூ.950-க்கு விற்ற ஜாதிப்பூ, காக்கரட்டான் தலா கிலோ ரூ.1,500-க்கும், ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை நாட்களுக்கு முன்னதாக வெளியூர் வியாபாரிகள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு வந்து அனைத்து வகையான பூக்களையும் வாங்கி செல்வது வழக்கம். அதன்படி திருச்சி, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூ வியாபாரிகள் திண்டுக்கல்லுக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர். மேலும் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்தும் குறைவாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் நேற்று பூக்களின் விலை உயர்ந்தது என்றார். மார்க்கெட்டில் ரோஜா ரூ.180, செவ்வந்தி ரூ.150, அரளி ரூ.400, சம்பங்கி ரூ.130, செண்டுமல்லி, கோழிக்கொண்டை தலா ரூ.70, வாடாமல்லி ரூ.50-க்கு நேற்று விற்பனை ஆனது.
அதே போல் தேனி மாவட்டத்திலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பூமார்க்கெட்டுகளில் பூக்கள் வாங்க ஏராளமாேனார் குவிந்தனர். ஒருபுறம் பண்டிகை காலத்ைதயொட்டி தேவை அதிகரிப்பு மற்றும் மறுபுறம் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்கப்பட்டது. அதேபோல் பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம் ஆகிய பூக்களும் கிலோ ரூ.2,000-க்கு விற்பனை ஆனது. வரத்து குறைந்ததால் ஆண்டிப்பட்டி பகுதியில் மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்