மேலும் அறிய

Sabarimala: மகரஜோதிக்காக குவியும் பக்தர்கள்.. முழு கண்காணிப்பில் சபரிமலை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மகரவிளக்கு பூஜை 

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.

இதனிடையே மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.  ஜனவரி 14 ஆம் தேதியான இன்று மகரஜோதி நடக்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதற்கான முன்பதிவு முடிந்துவிட்டது.

இன்று மாலை 6.20 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பல பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இதனால் சபரிமலை முழுக்க சரண கோஷம் தான் ஒலிக்கிறது. 

பாதுகாப்பு ஏற்பாடுகள் 

மகரஜோதி தரிசனம் காண பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கியிருக்கும் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க ரோந்து பணியை முடக்கி விட்டுள்ளனர். மேலும் எருமேலி - கரிமலை சாலை, புல்லுமேடு பகுதியில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமாக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றது. 

அதேபோல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பன்றிகள் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் வாழ்விடங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுவரை அதிக விஷமுள்ள 120 பாம்புகள் பிடிபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில்  ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இன்று சபரிமலை வந்தடைகிறது.

பின்னர் மாலை 6.30 மணிக்கு தங்க ஆபரணங்கள்  அணிவிக்கப்பட்டு இதன் பூஜைகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இன்று இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும், அதன்பிறகு நாளை காலை தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget