மேலும் அறிய

பழனி கோயில் கும்பாபிஷேகத்தை காண 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பழனி கோயில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவுசெய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விசாகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தின் போது ஜனவரி 27ஆம் தேதி காலை 8 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும பக்தர்கள் காலை 4மணி முதல் 8 மணிக்குள் மலை கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக 4ஆயிரம் பேர் என மொத்தம் 6ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோயில் கும்பாபிஷேகத்தை காண 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

கும்பாபிஷேகத்தை காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்வு வருகிற 23ம்தேதி நடைபெறவுள்ளதை அடுத்து வருகிற 23ம்தேதி முதல் 27ம்தேதி கும்பாபிஷேகம் நிறைவு அடையும் வரை மூலவர் தரிசனம் கிடையாது என்றும், அன்றுமுதல் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளதை பக்த்ரகள் தரிசனம் செய்ய முடியும் என்றும் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் பேருந்துகள் பழனி-தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமலக்கப்படும் என்றும், பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும் என்றும், அங்கிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் பழனி நகருக்குள் வந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோயில் கும்பாபிஷேகத்தை காண 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

மேலும் பழனி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1500 வாகனங்கள் வரை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை குறைப்பதற்காக நகர் முழுவதும் 266 கண்காணிப்பு காமிராக்களும், வைஃபை வசதியுடன் கண்காணிப்பு  கேமராக்கள் இணைக்கப்பட்ட எல்.இ.டி  திரை பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் ஆகிய வசதிகள் தடையின்றி ஏற்பாடுகள்‌ செய்யவும், பக்தர்கள் வரும் பாதையில் நடைபெறும் சாலைப் பணிகள், சாக்கடை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பழனி கோயில் கும்பாபிஷேகத்தை காண 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

குடமுழுக்கு நடைபெறும் மூன்று நாட்களுக்கு பழனி மலை கோவிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதானத் திட்டம் பழனி அடிவாரம் பகுதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பழனி கோவில் இணையான நடராஜன், பணித்துறை மின்சார துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்
Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்
Breaking News LIVE: திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
Breaking News LIVE: திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Embed widget