Pongal gift 2024: “ஏன் பொதுமக்களை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீங்க” - அதிகாரிகளிடம் கறார் காட்டிய எம்எல்ஏ
பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வழங்காமல் நெடு நேரமாக காக்க வைக்கப்பட்ட மக்கள், அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் சரமாரியாக விளாசிய சட்டமன்ற உறுப்பினர்.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.
அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் ரேஷன் கடை ஒன்றில் பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வழங்காமல் நெடு நேரமாக பொதுமக்களை காக்க வைக்கப்பட்டிருந்த சூழலில், அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் மதிமுக எம்.எல்.ஏ., சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#pongal2024 | பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வழங்காமல் நெடு நேரமாக காக்க வைக்கப்பட்ட மக்கள், அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் சரமாரியாக விளாசிய மதுரை மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்.@Boominathan_MLA @Johnchris98 @LPRABHAKARANPR3 @abpnadu @abpmajhatv pic.twitter.com/LBnRnwgiEd
— arunchinna (@arunreporter92) January 11, 2024