Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது.
2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டுக்கு முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்கள், அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் மக்கள் கூடி 2024 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
Another close up video of #Thalaivar Dharisanam
— Suresh balaji (@surbalutwt) January 1, 2024
❤️❤️❤️❤️❤️
Thank you thalaivaaa @rajinikanth 🙏#Rajinikanth | #SuperStarRajinikanth | #Lalsalaam | #Vettaiyan | #Thalaivar171 | #HappyNewYear2024 | #HappyNewYear pic.twitter.com/xKAmhGhieZ
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அதிகாலை முதலே ரஜினி வீட்டின் முன்பு அவரின் வாழ்த்தை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இதனிடையே வீட்டின் வாயில் அருகே வந்த ரஜினி அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு தன்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இன்னும் 2 வாரம் தான்..
3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் “லால் சலாம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குனராகவும், பிரவீன் பாஸ்கர் எடிட்டராகவும் லால் சலாம் படத்தில் பணியாற்றுகின்றனர். லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்த படத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யாவின் அப்பாவும், நடிகருமான ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நிரோஷா, ஜீவிதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏற்கனவே லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.