மேலும் அறிய

Pongal 2024 Nalla Neram: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.. பொங்கல் வைக்க சிறந்த நேரம் எது தெரியுமா?

Pongal 2024 Nalla Neram in Tamil: தைப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்னவென்று கீழே விரிவாக காணலாம்.

Pongal Vaikka Nalla Neram 2024 in Tamil: தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.

பொங்கல்:

உணவை அளிக்கும் விவசாயிகளை போற்றும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையாக கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடி வருகிறோம். இரண்டாவது நாள் விவசாயத்திற்கு பெருமை சேர்க்கும் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கலாக கொண்டாடி வருகிறோம்.

இந்த நிலையில், பொங்கல் திருநாளில் பொங்கல் எப்போது வைக்க வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர்த்த நேரங்களில் செய்தாலே அந்த காரியம் சிறப்பானதாக அமையும் என்பது ஐதீகம் ஆகும். பொங்கல் பண்டிகை நடப்பாண்டில் இன்று  கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் வைக்கச் சிறந்த நேரம்:

தைப் பொங்கல் கொண்டாடப்படும் வரும் திங்கள்கிழமை (15ம் தேதி) காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை எமகண்டமும் வருகிறது. இந்த நேரம் தவிர்த்து அன்றைய தினத்தில் எப்போது வேண்டுமானாலும் பொங்கல் வைக்கலாம்.

சூரிய உதயத்தின்போது பொங்கல் வைத்தால் சிறப்பு என்று சொல்வது உண்டு. தைப் பொங்கலன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரையும், காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரையும் பொங்கல் வைக்க மிகச்சிறந்த நேரம் ஆகும். பொங்கல் வைத்து வழிபடுவதற்கு இந்த நேரம் மிகச்சிறந்த நேரம் ஆகும்.

இந்த நேரத்தில், பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பானை பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைப்பார்கள்.

மாட்டுப் பொங்கல் வைக்க சிறந்த நேரம்:

உழவுக்கு உற்ற நண்பனாக விளங்கும் மாட்டைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வரும் 16ம் தேதியன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மாட்டுப் பொங்கல் கொண்டாட உகந்த நேரம் ஆகும்.

இந்த நேரத்தில் வீட்டில் வளர்க்கும் மாடுகளை அலங்கரித்து குங்குமம், சந்தனம் வைத்து அதை அலங்கரித்து வழிபடுவார்கள்.

தமிழ்நாட்டின் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையன்று மக்கள் வீடுகளின் வாயிலில் கரும்புகளும், தோரணங்களும் கட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம் ஆகும்.

தைப்பொங்கலின்போது வீட்டின் பூஜையறையில் சாமி படங்களுக்கு மாலையிட்டு, அதன்முன்பு வாழை இலையிட்டு அதில் பொங்கல் வைத்து வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து வணங்க வேண்டும். அன்றைய தினம் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவதும் வழக்கம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget