Palani Temple : பழனி கோயிலில் மீண்டும் இசைக்கு அனுமதி; முருகன் பாடலை இசைத்து நாதஸ்வர கலைஞர்கள் நன்றி
ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் தலைமையில் வந்திருந்த நாதஸ்வர கலைஞர்கள் திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பாக முருகன் பாடலை இசைத்து கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
பழனி கோயிலில் நாதஸ்வரம் இசைக் கருவிகள் இசைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாதஸ்வரக் கலைஞர்கள் முருகன் பாடலை இசைத்து நன்றி தெரிவித்தனர்.
தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?
அறுபடை வீடுகளில் மூன்றாம் படையான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கடந்த ஐந்தாம் தேதி கரூர் மாவட்டம் தோகை மலையை சேர்ந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு நாதஸ்வர இசைக்கருவிகளுடன் படிப்பாதையில் சென்றபோது பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி நாதஸ்வர தவில் இசைத்து மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதித்திருப்பதாக கூறினர். அப்போது பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நாதஸ்வர கலைஞர்கள் கோவில் உதவி ஆணையர் லட்சுமியிடம் கேட்க சென்ற போது, நீங்கள் இசைப்பது, இசை போல இல்லை என்றும் நீங்கள் வாசிப்பது முருகனை எழுந்து ஓடி விடுவான் போல இருக்கிறது என்றும், பெண் அருள் வந்து ஆடுவதை தண்ணியை போட்டு ஆடுவதாகவும், உங்களுடைய சான்றிதழை கொடுங்கள் ரத்து செய்கிறேன் என்றும் அவமரியாதையாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரல் ஆன நிலையில் கோவில் நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் தவில் நாதஸ்வரம் இசை கருவிகள் மங்கள இசை உடன் மட்டும் வாசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, இன்று ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் தலைமையில் வந்திருந்த நாதஸ்வர கலைஞர்கள் திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பாக முருகன் பாடலை இசைத்து கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
Eeramana Rojave Swathi: ஈரமான ரோஜாவே 2 ஓவர், அடுத்து ஆராதனா.. ஸ்வாதியின் புதிய இணைய தொடர்!
தருமபுரி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் - விஏஓ கையும் களவுமாக சிக்கியது எப்படி?
பின்னர் இதுகுறித்து பேசிய ராம ரவிக்குமார், கோவில் நிர்வாகம் மங்கள இசை நாதஸ்வர இசைக்க அனுமதி மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் மீண்டும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இது குறித்து கேட்கச் சென்ற நாதஸ்வர கலைஞர்களை உதவி ஆணையர் லட்சுமி பேசியதையும் கண்டித்தும் , பக்தர்கள் குடித்துவிட்டு ஆடுகிறார்கள் என்று கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்தும் அவரை பணி மாறுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பழனி கோவில் அலுவலகத்தில் நாதஸ்வர கலைஞர்கள் திடீரென முருகன் பாடலை இசைத்து நன்றி தெரிவிக்க குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.