மேலும் அறிய

Actor Yash: “கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் அறியும் வகையில் அமைந்த படம் தான் “கேஜிஎஃப்”. இந்த படம் கன்னட நடிகராக இருந்த யஷை பேன் இந்தியா ஸ்டாராக மாற்றியது. 

தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்தில் நடித்த அவர், தற்போது அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார். யஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் யஷ் பிறந்தநாளில் மிகப்பெரிய சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரசிகர்கள் பேனர் வைக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்னழுத்த கம்பி பேனர் மீது உரசியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற ஆந்திர ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், யஷ் பிறந்தநாளிலும் அதே சம்பவம் நடைபெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Sai Pallavi:
Sai Pallavi: "என்னோட Support உங்களுக்கு இருக்கும்.." நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கு சாய் பல்லவி ஆதரவு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
Embed widget