மேலும் அறிய
Eeramana Rojave Swathi: ஈரமான ரோஜாவே 2 ஓவர், அடுத்து ஆராதனா.. ஸ்வாதியின் புதிய இணைய தொடர்!
Eeramana Rojave Swathi: ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை ஸ்வாதி நடிக்கும் புதிய இணைய தொடர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
![Eeramana Rojave Swathi: ஈரமான ரோஜாவே 2 ஓவர், அடுத்து ஆராதனா.. ஸ்வாதியின் புதிய இணைய தொடர்! Eeramana Rojave Swathi acting in new web series Aaradhana promo Eeramana Rojave Swathi: ஈரமான ரோஜாவே 2 ஓவர், அடுத்து ஆராதனா.. ஸ்வாதியின் புதிய இணைய தொடர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/07/4f9e0123f224c7ab637c686350390d161704635252647102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஈரமான ரோஜாவே நடிகை ஸ்வாதி
Eeramana Rojave Swathi: ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமான சின்னத்திர நடிகை ஸ்வாதி நடிக்கும் புதிய இணைய தொடர் குறித்த புரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த சீரியலில் நடித்துள்ள நடிகை ஸ்வாதி கர்நாடகாவைச் சேர்ந்தவர். குடும்ப சிக்கல்களில் இருந்து விலகி சவால்களை சந்திக்கும் பெண்ணாக இவர் நடித்துள்ளார். பியூட்டிஃபுல் மனசுஹாலு எனும் கன்னட படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ள இவர், வேறு பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஈரமான ரோஜாவே சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இவருக்கென சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகத்துக்கே அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், அதே வரவேற்பு தற்போது இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்து வருகிறது.
View this post on Instagram
இந்த சீரியலில் ஸ்வாதியின் நடிப்பு பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இந்த நிலையில் ஸ்வாதி நடிக்கும் புதிய இணைய தொடரின் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து குடும்ப சிக்கல்களில் சிக்கி தவிக்கும் பெண்ணாக இல்லாமல் சுதந்திரமான விருப்பமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்ணின் வாழ்க்கைக்கு ஆசைப்படும் கேரக்டரில் ஆராதனாவாக ஸ்வாதி நடித்துள்ளார்.
View this post on Instagram
ஈரமான ரோஜா சீரியலில் நடித்து முடித்த ஸ்வாதி அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தும் வகையில் இணைய தொடர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View this post on Instagram
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலின் இரண்டாம் பாகமாக வந்தது ஈரமான ரோஜாவே 2. இதில் சித்தார்த், திரவியம், கேப்ரியலா, ஸ்வாதி என 4 பேர் முக்கிய நடிகர்களாக நடிக்க, தாய் செல்வம் அவர்கள் இயக்கி வந்தார். 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் சமீபத்தில் நேர மாற்றமாகி தற்போது மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion