மேலும் அறிய

சிசிடிவி கேமரா இல்லை..! 13 ஆண்டுகளில் 205 பேர்..! மதுரையில், ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி..

" கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலில் உதவி பெட்டிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது "

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் M.காசிமாயன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஓட்டுனர்கள் அரசு பேருந்து இயக்கும் பொழுது அலைபேசியில் (Mobile Phone) பேசிக்கொண்டு பேருந்து இயக்கியது தொடர்பாக , கேள்வி எழுப்பியிருந்தார், இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பில், அளிக்கப்பட்ட பதில்கள் பின்வருமாறு :-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பகுதியில்  மதுரையில்  மொத்தம் 1004 பேருந்துகள் இயக்கப்படுகிறது.2010 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 28 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம்

ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின்போது, அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 20 பேர். 2010 & 2011 வருடங்களில் யாருக்கும் அபராதம்  விதிக்கப்படவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளில் 205 பேர்

மேலும் ,2012 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின்போது அலைபேசியில்  பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 14 பேர். 2013 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 12 பேர். 2014 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில்  பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 14 பேர். 2015 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 13 பேர். 2016 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 8 பேர். 2017 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின்போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 24 பேர். 2018 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 7 பேர். 2019-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 20 பேர். 2020 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 9 பேர். 2021 ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் பணியின் போது அலைபேசியில்  பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 12 பேர். 2022 ஆம் ஆண்டு 05.11.22 வரை  மதுரை மண்டலத்தில் பணியின்போது அலைபேசியில்  பேசிக்கொண்டு பேருந்தை இயக்கிது 24 பேர். ஆக மொத்தம் கடந்த 13 ஆண்டுகளில் மொத்தம் 205 பேர் அலைபேசியில்  பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதும், இதில் நான்கு ஆண்டுகளில் (2012, 2016,2017, 2021) மட்டுமே 6 பேரிடம் மட்டுமே அபராதம் தொகை ரூபாய் 2100/- மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி எத்தனை உள்ளது என்கின்ற கேள்வியை முன் வைத்து கேட்டிருந்தார். அதற்கு மதுரை கோட்டத்தில் இருந்து அனைத்து அரசு பேருந்துகளிலும் முதலுதவி பெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா இல்லை..! 13 ஆண்டுகளில் 205 பேர்..! மதுரையில், ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி..

சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை

மத்திய அரசின் நிர்பயா திட்டத்திற்கு மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை அதற்கு எந்த நிதியும் செலவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சரமாரி கேள்வி..?

இது குறித்து சமூக அலுவலர் காசிமாயன் கூறுகையில், மோட்டார் வாகன சட்டப்படி, அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால், ரூபாய்.1000/- வரை பொதுமக்களிடம்  அபராதம் வசூலிக்கப்படும் போது இவர்கள் மட்டும் குறைவான தொகை குறைவான நபர்களிடம் வசூலிப்பது சரியா? என  கேள்வி எழுப்புகிறார். மதுரை போக்குவரத்து கழகம் அனைத்து  அரசு  பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. ஆபத்தான நேரங்களில் முதலுதவி பெட்டியில் உதவுவதற்கான எந்தவித மருந்துகளும் அவற்றில் இல்லாதது  அம்பலமாகி உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 24 ஆயிரம் நகர, புகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான நாள்களில் தினசரி 5 லட்சம் போ் வரையில் பயணிக்கின்றனா். இந்நிலையில் மதுரை போக்குவரத்து கழக கூட்டத்தில் மட்டும் சுமார் 3500 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநா் இருக்கையின் பின்புறம் முதலுதவிப் பெட்டி இருக்கும். இந்த பெட்டியை வைத்து அதில் மருந்துப் பொருள்கள் இடம்பெற்றிருந்தால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி சான்றிதழை வழங்குவா். தற்போதைய சூழலில் அரசு பேருந்துகள் அனைத்தும் தனியாருக்கு நிகராக, அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக என்பது கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறுகிறார் காசிமாயன்

சிசிடிவி கேமரா இல்லை..! 13 ஆண்டுகளில் 205 பேர்..! மதுரையில், ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி..

குறிப்பாக பேருந்தினுள் ஏறும் பயணிகள் யாராவது காயமடைந்தால், அவா்களுக்கு அவசர உதவி செய்வதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள், இதர உபகரணங்கள் எதுவும் முதலுதவிப் பெட்டியில் இல்லை.  அதேபோல தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவி, விபத்து நேரிட்டால் பயணிகள் கண்ணாடிகளை உடைத்து தப்பிப்பதற்காக வைக்கப்படும் சுத்தியல் போன்றவை பெரும்பாலான பேருந்துகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கிறார்.

காட்சி பொருளாக உள்ளது

ஏறத்தாழ 3500 பேருந்துகளுக்கும் மேல், 15லட்ச ரூபாய் செலவில் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் முதலுதவி பெட்டி முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளித்திருந்தது. ஆனால் பத்தில் 8 மேற்பட்ட பேருந்துகளில் முதலுதவி பெட்டி முறையாக பராமரிக்கப்படாமல் வைக்கப்படாமலும் இருப்பது சில ஒட்டுநர்கள் மற்றும் நேரில் கள ஆய்வு செய்த சமூக ஆர்வலர்கள் மூலமாக தெரியவருகிறது.

முதலுதவிப் பெட்டியில் எந்த நேரத்திலும் பயணிகளுக்கு உதவும் வகையிலான மருந்துகள் இருக்க வேண்டும். அதனை நடத்துநா் எடுத்து வழங்கும் வகையில் பெட்டி வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான முதலுதவி பெட்டியில் மருந்துகள் ஏதுமின்றி வெறும் காட்சி பொருளாகவே காண முடிகின்றது என தெரிவிக்கிறார் அவர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
Rasipalan Today January 10:  தனுசுக்கு அமைதி தேவை; மகரத்திற்கு பொறுப்பு அதிகரிக்கும் !
Rasipalan January 10: தனுசுக்கு அமைதி தேவை; மகரத்திற்கு பொறுப்பு அதிகரிக்கும் !
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Embed widget