புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாப் ; கையோடு வரும் சிமெண்ட், செங்கல்: மதுரையில் ஏற்பட்ட அவலம் !
Newly opened bus stop; Cement and bricks that come with hand, disaster in Madurai!
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ வடக்கூர் கிராமத்தில் மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2021-2022 மாவட்ட ஊராட்சி நிதியில் 5 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகளானது கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து நிறுத்தம் கட்டும்போது தரமற்ற சிமெண்ட் மற்றும் மண் கலவைகளை பயன்படுத்தி முறைகேடு செய்த நிலையில் பேருந்து நிறுத்த கட்டிடத்தின் தூண்களை சுற்றியுள்ள சுவர்கள் கையோடு பெயர்த்து வரும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து இது குறித்து அந்த கிராமத்தின் இளைஞர்கள் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று நேரடியாக கள ஆய்வு செய்தபோது பேருந்து நிறத்தம் கட்டியதில் தரமற்ற முறையில் பணி மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.
மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவடக்கூர் வருவாய் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மிகவும் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டதாக அதன் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
— arunchinna (@arunreporter92) April 18, 2023
| #madurai | #bus | @LPRABHAKARANPR3 | pic.twitter.com/C6qUfBJxgY
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்