மேலும் அறிய

World Heritage Day: "மரபை காக்க விழிப்புணர்வு வேண்டும்” - சிவகங்கை தொல்நடைக் குழு கோரிக்கை

தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் மற்றும் கல்லூரிகளில்  தொன்மையின் சிறப்பை எடுத்துரைப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழு ஈடுபட்டு வருகிறது.

மரபை காக்க விழிப்புணர்வு வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாளை உலக மரபு நாளாக கொண்டாட யுனஸ்கோ அமைப்பு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இனமும் தன்னிடத்தே தனித்தன்மையுடைய மரபை பாரம்பரியத்தை பெற்றுள்ளன அவற்றை பாதுகாக்க இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. அவ்வாறான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நாளாக உலக மரபு நாளை நாம் அனைவரும் கொண்டாடி நமது பாரம்பரியத்தை மரபை இளைஞரிடம் கொண்டு சேர்ப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நமது கடமையாகும்.

World Heritage Day:
 
தொல்லியல் கருவூலமான சிவகங்கை மாவட்டம்.
 
சிவகங்கை மாவட்டம் பொதுவாக தொல்லியல் சின்னங்களாலும் கீழடித் தொகுப்பு அகழாய்வுகளாலும் தொல்லியல் கருவூலமாக விளங்குகிறது. கீழடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு பார்வையிடப்படுகிறது அது சிவகங்கை மற்றும் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.

World Heritage Day:
 
சிவகங்கை மாவட்டம் திருமலை.
 
திருமலையில்  நான்காயிரம் ஆண்டுகள் பழமையானதும் தமிழகத்தில் கீழ்வாலை, செத்தவரை (விழுப்புரம் மாவட்டம்), கிடாரிப்பட்டி (மதுரை மாவட்டம்) மற்றும் சந்திராபுரம் (வேலூர் மாவட்டம்) ஆகிய பாறை ஓவிய தளங்களில் காணப்படுகிற பறவை முகம் கொண்ட மனித உருவங்களை இங்கும் காணலாம். விலங்கின் மீது மனிதன் அமர்ந்து வேட்டையாடுகிற வேட்டைக் காட்சி, கோட்டு உருவங்கள் ஆகியவை செஞ்சாந்து பாறை ஓவியங்களாக காணக்கிடைக்கின்றன.

World Heritage Day:
 
தமிழி எழுத்து.
 
2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து.. இயற்கையாய் அமைந்த குகைத் தளத்தின் மேற்பகுதியில்  வெட்டப்பட்டுள்ள கா டிக்கு மேலே எருக்காடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்’ என்னும் தமிழி எழுத்து தொடர் காணப்படுகிறது. 
 
முற்கால பாண்டியர்களின் குடைவரை கோவில்.
 
சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி பிள்ளையார்பட்டி மகிபாலன்பட்டி பிரான்மலை போன்ற இடங்களில் குடைவரை கோவில்கள் காணப்படுகின்றன. அதில் திருமலையில் காணப்படும் குடைவரை கோவிலில்  பிரான்மலை குடைவரை போல சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலமாக காட்சி தருவது சிறப்பு.

World Heritage Day:
 
32 கல்வெட்டுகள்.
 
மலைப்பகுதியின் இடையில் குடைவரை கோவிலை அடுத்து அமைந்துள்ள கட்டுமான கோவிலில் முதலாம் மாறவர்மன், குலசேகர பாண்டியன் போன்றவர்களின் 32 கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில்  பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக தமிழக அரசால் இரண்டு இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை அரண்மனை சிறுவயல் மருது பாண்டியர் கோட்டையும் திருமலை தமிழி எழுத்தும் ஆகும்.
 
விழிப்புணர்வு தேவை.
 
தமிழக அரசு திருமலை மேல் உள்ள தமிழி எழுத்து கல்வெட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக (2015-16) அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால் பொதுவாக தொடர்ந்து இங்கு உள்ள குகைத்தளத்தில் மது அருந்துவதும் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பாறைகளில் வண்ணம், உளி கொண்டு எழுதுவதும் பாரம்பரியமிக்க பாறை ஓவியங்களில் கிறுக்கி வைப்பதும் தொடர்கதையாக உள்ளன இதன் சிறப்பை பொதுமக்களிடத்தும் இளைஞர்களுக்கும் வெளிப்படுத்துவதன் வழி இதை பாதுகாக்க   முடியும்.
 
விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் தொன்மையை, மரபை பாதுகாப்போம்.
 
உலக மரபு நாளில் மட்டுமல்லாது தொடர்ச்சியாக தொன்மையை பாதுகாப்பதில் பள்ளிகளில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் மற்றும் கல்லூரிகளில்  தொன்மையின் சிறப்பை எடுத்துரைப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழு ஈடுபட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget