பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; கையும் களவுமாக பிடிபட்ட நில அளவையர் - சிக்கியது எப்படி..?
நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் பட்டா மாறுதலுக்கு ரூபாய் 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளையச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (32). இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். மகாலெட்சுமியின் கணவர் வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு திசையன்விளையில் 4 - சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வேல்முருகன் வெளிநாடு சென்ற நிலையில் மகாலெட்சுமி தன்னுடைய 4 சென்ட் இடத்திற்கு பட்டா வேண்டி திசையன்விளை வட்டாசியர் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை நில அளவையர் அன்பழகனிடம் (45) மனு கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க: பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸை அண்ணாமலை சந்தித்தது ஏன்..? பரபரப்பு பின்னணி தகவல்கள்..
பட்டா மாற்றம் செய்ய மகாலெட்சுமியிடம் சர்வேயர் அன்பழகன் ரூ.6000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் நேற்று காலை 11.00 மணியளவில் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையின் டிஎஸ்பி மதியழகன், ஆய்வாளர் ராபின் ஞானசிங் மற்றும் உதவி ஆய்வாளர்கள். சண்முகநைனார், சீதாராமன், இசக்கிபாண்டி ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மகாலெட்சுமியிடம் ரசாயன கலவையால் பூசப்பட்ட பணம் ரூ.6000 கொடுத்தனர்.
இதனை சர்வேயர் அன்பழகனிடம் மகாலெட்சுமி கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அன்பழகனை கையும் களவுமாக பிடித்து திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்ட நில அளவையர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது.
மேலும் படிக்க: Crime : கண்ணாடி ஜார்களில் 7 சிசுக்களின் சடலங்கள்: கர்நாடகாவில் அதிர்ச்சி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்