Palani: முத்தமிழ் முருகன் மாநாடு கடைசி நாள்; குடும்பத்துடன் கண்காட்சியை கண்டுகளித்த தூய்மை பணியாளர்கள்
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம் இன்றுடன் கடைசி நாள் என்பதால் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் கண்காட்சியை கண்டுகளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை கடந்த 24ம் தேதி காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பெரியசாமி, சேகர் பாபு, சக்கரபாணி, ஆதீனங்கள், நீதிபதிகள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம், ஆன்மீக பாடல்களுக்கு நடனம் என தொடர்ந்து விழா விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது நாளான ஞாயிற்று கிழமையும் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் மாநாடு நடைபெறும் இடமான பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி முன்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். இதனை ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம், பட்டிமன்றம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அருணகிரிநாதர் அரங்கில் நடைபெற்றது.
Ravichandran Ashwin:ரோஹித்துக்கு நோ.. தோனிக்கு எஸ்! அஸ்வினின் ஆல் டைம் ஐபிஎல் அணி
இரு தினங்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொண்டனர். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த வேல் அரங்கம், 3d திரையரங்கு, vr தொழில்நுட்பத்தில் அறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் நிகழ்வு, புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு முடிந்தும் வருகிற 30-ஆம் தேதி வரை கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
Second Marriage: இரண்டாவது திருமண யோகம் யாருக்கு? பரிகாரம் செய்யாதீர்கள்..! ஜோதிடம் சொல்வது என்ன?
இதனை தொடர்ந்து மாநாட்டு நடைபெற்ற போது கூட்ட நெரிசல் காரணமாக பலரும் கண்காட்சியை முழுமையாக காண முடியாத நிலை ஏற்பட்டது. கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். 3d திரையரங்கு மற்றும் அறுபடை வீடுகளை நேரில் பார்ப்பது போல உணர்வதாக கண்காட்சியை பார்த்து விட்டு வந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மாநாடு முடிந்தும் இன்றுடன் 30-ஆம் தேதி வரை கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில், தொடர்ந்து கண்காட்சி அரங்கத்தை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தை இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிடுவதற்காக வருகை அதிகரித்திருந்தது.
மேலும் மாநாட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு குடும்பத்துடன் அழைத்து வந்து கண்காட்சி பார்வையிட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் கண்காட்சி அரங்கத்தை கண்டுகளித்தனர்.