(Source: ECI/ABP News/ABP Majha)
Ravichandran Ashwin:ரோஹித்துக்கு நோ.. தோனிக்கு எஸ்! அஸ்வினின் ஆல் டைம் ஐபிஎல் அணி
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டு வந்தாலும் ஐபிஎல் ஆல்-டைம் லெவன் அணியில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியை கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுத்தார்.
ரோஹித்தை புறக்கணித்த அஸ்வின்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஐபிஎல் ஆல்-டைம் லெவன் அணியை அறிவித்துள்ளார். இதில் மொத்தம் 7 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நான்கு வீரர்களை அஸ்வின் தேர்வு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் விளையாடி இருந்தாலும் அந்த அணியில் இருந்து இரண்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டு வந்தாலும் ஐபிஎல் ஆல்-டைம் லெவன் அணியில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியைத்தான் கேப்டனாக வைத்துள்ளார் அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை மூன்றாவது இடத்தில் தேர்வு செய்திருக்கிறார்.
சுழற்பந்து வீச்சு பிரிவில் சுனில் நரைன் மற்றும் ரஷித் கான் ஜோடியை அஷ்வின் தேர்வு செய்தார். இருவரும் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, பேட்டர்களாகவும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை புவுனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுடன் ஜாம்பவான் லசித் மலிங்காவையும் தன்னுடைய ஆல்-டைம் லெவன் அணியில் அறிவித்துள்ளார் அஸ்வின்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்:
ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், எம்எஸ் தோனி (C/WK), சுனில் நரேன், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் , ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா
மேலும் படிக்க:Paris Paralympics 2024:பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வேட்டையை தொடங்குமா இந்தியா.. இன்றைய போட்டி அட்டவணை
மேலும் படிக்க: Gautam Gambhir:லக்னோ அணியே கம்பீர் அணி தான்.. சஞ்சீவ் கோயங்கா நெகிழ்ச்சி